'வெயிலூர்' வேலூரில் மூத்த தலைவர்கள்.. திமுக வேட்பாளர்கள் பயோடேட்டா
துரைமுருகன்
காட்பாடி தொகுதி திமுக வேட்பாளராக
துரைமுருகன் (வயது 78) அறிவிக்கப்பட்டுள்ளார். 1971, 1989, 1996, 2001, 2006, 2011 ஆகிய சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வென்றவர். இவர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். திமுக ஆட்சிக் காலங்களில் அமைச்சராகப் பதவி வகித்தவர்.
காந்தி
ராணிப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளராக ஆர்.
காந்தி (வயது 70 அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் 1965-ல் இருந்து திமுகவில் இருந்து வருகிறார். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட திமுக செயலராக இருந்தவர். 1996, 2006 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார். தற்போது வேலூர் கிழக்கு மாவட்ட செயலர்.
கார்த்திகேயன்
வேலூர் தொகுதி திமுக வேட்பாளராக ப.
கார்த்திகேயன் (வயது 54) நிறுத்தப்பட்டுள்ளார். இவர் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர். வேலூர் மாநகரச் செயலர்; 2006 முதல் 2008-ம் ஆண்டு வரை நகராட்சித் தலைவராக இருந்தார். பின்னர் வேலூர் மேயராகவும் இருந்தார்.
ஈஸ்வரப்பன்
ஆற்காடு தொகுதி திமுக வேட்பாளராக
ஈஸ்வரப்பன் (வயது 38) நிறுத்தப்பட்டுள்ளார். இவர் வேலூர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர். 2006 முதல் 2011 வரை ஆற்காடு நகர்மன்றத் தலைவராகப் பணியாற்றியவர். பொறியியல் பட்டதாரி.
நந்தகுமார்
அணைக்கட்டு தொகுதி திமுக வேட்பாளராக
நந்தகுமார் (வயது 47) நிறுத்தப்பட்டுள்ளார். இவர் நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர். லத்தேரி ஊராட்சி மன்றத் தலைவர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர். 2011 முதல் வேலூர் மத்திய மாவட்ட திமுக செயலராக இருந்து வருகிறார்.
ராஜமார்த்தாண்டன்
குடியாத்தம்(தனி) தொகுதி திமுக வேட்பாளராக
ராஜமார்த்தாண்டன் (வயது 37) நிறுத்தப்பட்டுள்ளார். வேலூர் மத்திய மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளராக உள்ளார். 2011ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.
அமலு விஜயன்
கேவி குப்பம் (தனி) தொகுதி வேட்பாளராக
அமலுவிஜயன் (வயது 34) அறிவிக்கப்பட்டுள்ளார். குடியாத்தம் வடக்கு ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளராக உள்ளார். அத்துடன் ஒன்றிய குழு உறுப்பினராகவும் உள்ளார்.
நல்லதம்பி
திருப்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளராக
நல்லதம்பி (வயது 40) நிறுத்தப்பட்டுள்ளார். இவர் திருப்பத்தூர் ஒன்றிய செயலராக உள்ளார்.
பவானி வடிவேலு
அரக்கோணம் (தனி) தொகுதி வேட்பாளராக
பவானி வடிவேலு (வயது 33) அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் முன்னாள் மாவட்ட அமைப்பாளர். இவரது கணவர் வடிவேலு, நெமிலி ஒன்றிய திமுக செயலர்.
கவிதா தண்டபாணி
ஜோலார்பேட்டை தொகுதி திமுக வேட்பாளராக
கவிதா தண்டபாணி (வயது 34) நிறுத்தப்பட்டுள்ளார். வேலூர் மேற்கு மாவட்ட மகளிரணி பொறுப்பாளராக உள்ளார்.
-
"செந்தில் பாலாஜி கோவையில் போட்டியிட காரணம் இதுதான்" - பிரச்சாரத்தில் ஓப்பனாக சொன்ன முதல்வர் ஸ்டாலின் -
அதிமுக கோட்டையில் ஓட்டை போடும் திமுக.. கொங்கு மண்டலத்தில் மாறும் களம்! Poll Tracker கருத்துக்கணிப்பு -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
கரூர் டூ கோவை தெற்கு.. செந்தில் பாலாஜிக்கு தொகுதியை மாற்றியது ஏன்? ஸ்டாலின் கொடுத்த விளக்கம்! -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ! ஊதிய உயர்வும் அம்போ! தேர்தல் நேரத்தில் பறந்த கண்டனம்! -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications