தருமபுரியில் மாஜி எம்பி, சிட்டிங் எம்.எல்.ஏ ப்ளஸ் சீனியர்ஸ்- அதிமுக வேட்பாளர்கள் பயோடேட்டா
கே.பி. அன்பழகன்
பாலக்கோடு அதிமுக வேட்பாளராக சிட்டிங் எம்.எல்.ஏ.
கே.பி. அன்பழகன் (வயது 58) நிறுத்தப்பட்டுள்ளார். வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். 2001,2006, 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார். 2003-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் செய்தித் துறை அமைச்சராகவும் இருந்தவர்.
கேபிமுனுசாமி
பென்னாகரம் தொகுதி அதிமுக வேட்பாளராக
கேபி முனுசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் உருவாக்கப்படுவதற்கு முன்பு ஒன்றுபட்ட தருமபுரி மாவட்ட செயலராக இருந்தவர் முனுசாமி. இவர் கிருஷ்ணகிரி லோக்சபா எம்.பியாகவும் 1991,2001-ல் காவேரிபட்டினம் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் வென்றவர். 2011-ல் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்டு வென்ற கேபி முனுசாமி அமைச்சராகவும் பதவி வகித்தவர்.
முருகன்
அரூர்(தனி) தொகுதி வேட்பாளராக ஆர்.ஆர்.
முருகன் (வயது 51) நிறுத்தப்பட்டுள்ளார். 2009-ம் ஆண்டு முதல் அரூர் ஒன்றிய செயலராக இருந்து வருகிறார். தருமபுரி மாவட்ட அதிமுக பொருளாளர், அரூர் தொகுதி பொறுப்பாளர் பதவிகளையும் வகித்திருந்தார்.
பழனியப்பன்
பாப்பிரெட்டிபட்டி தொகுதி அதிமுக வேட்பாளராக சிட்டிங் எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான
பழனியப்பன் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளார். 2001-ல் மொரப்பூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 2011 தேர்தலில் பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார். அதிமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொறுப்பும் வகிக்கிறார்.
பு.தா. இளங்கோவன்
தருமபுரி தொகுதி அதிமுக வேட்பாளராக பு.தா.
இளங்கோவன் (வயது 52) அறிவிக்கப்பட்டுள்ளார். பா.ம.க.வில் இருந்து 2004-ம் ஆண்டு அதிமுகவுக்கு வந்தார். 1999-ல் தருமபுரி லோக்சபா தொகுதியில் பாமக சார்பாக போட்டியிட்டு எம்.பி.யாக வென்றவர். 1996-ல் புவனகிரி சட்டசபை தேர்தலில் பாமக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications