அமைச்சர்கள், மேயர்.... ஸ்டிராங் வேட்பாளர்களை மதுரையில் களமிறக்கிய அதிமுக- பயோடேட்டா விவரம்
பெரியபுள்ளான்
மேலூர் தொகுதி அதிமுக வேட்பாளராக பி.
பெரியுள்ளாண் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர். தற்போது மேலூர் தொகுதி செயலர், வலையபட்டி ஊராட்சித் தலைவராக இருக்கிறார்.
தக்கார் பி. பாண்டி
மதுரை கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளராக தக்கார்
பி. பாண்டி (வயது 67) அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்ஹ்டவர். மதுரை மாவட்டம் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலராகவும் கிழக்கு ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவராகவும் உள்ளார்.
கே. மாணிக்கம்
சோழவந்தான் தொகுதி அதிமுக வேட்பாளராக கே.
மாணிக்கம் நிறுத்தப்பட்டுள்ளார். 1990-ம் ஆண்டு அதிமுகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார். தற்போது அதிமுக மதுரை புறநகர் மாவட்ட மாணவரணி செயலராக உள்ளார்.
ராஜன் செல்லப்பா
மதுரை வடக்கு தொகுதி வேட்பாளராக
ராஜன் செல்லப்பா அறிவிக்கப்பட்டுள்ளார். 1992-98-ல் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்தவர். 2011 உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மேயராக வென்றவர்.
எஸ்.எஸ். சரவணன்
மதுரை தெற்கு தொகுதி வேட்பாளராக எஸ்.எஸ்.
(வயது 40) நியமிக்கப்பட்டுள்ளார். செளராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்தவர். மதுரை மாநகராட்சி 73-வது வார்டு கவுன்சிலராக உள்ளார்.
ஜெயபால்
மதுரை மத்திய தொகுதி வேட்பாளராக
ஜெயபால் (வயது 56) அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர். மதுரை மாநகர் மாவட்ட அதிமுகவின் 1-ம் பகுதி செயலர்.
சீனிவேல்
திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளராக
(வயது 65) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர். 2001-2006-ல் எம்.எல்.ஏ.வாக இருந்தவர். தற்போது மதுரை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலராக இருக்கிறார்.
நீதிபதி
உசிலம்பட்டி அதிமுக வேட்பாளராக பா.
நீதிபதி (வயது 49) நியமிக்கப்பட்டுள்ளார். உசிலம்பட்டி அதிமுக ஒன்றிய செயலர். 2001 முதல் 3 முறை மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்.
செல்லூர் ராஜூ
மதுரை மேற்கு தொகுதி வேட்பாளராக கூட்டுறவுத் துறை அமைச்சர்
செல்லூர் ராஜூ (வயது 64)அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பிரமலைக் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்.
ஆர்.பி. உதயகுமார்
திருமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளராக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.
உதயகுமார் (வயது 43) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மறவர் சமூகத்தைச் சேர்ந்தவர். ஜெயலலிதா பேரவையின் மாநில செயலராக இருக்கிறார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications