Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மிக இளம்வயது வேட்பாளரை நெல்லை மாவட்டத்தில் களமிறக்கிய அதிமுக- பயோடேட்டா

Subscribe to Oneindia Tamil

நயினார் நாகேந்திரன்

திருநெல்வேலி தொகுதி அதிமுக வேட்பாளராக சிட்டிங் எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன்நயினார் நாகேந்திரன் (வயது 55) அறிவிக்கப்பட்டுள்ளார். 2001-ல் போக்குவரத்து, மின்சாரம், தொழில்துறை அமைச்சராக பதவி வகித்தார். திருநெல்வேலி மாநகர் மாவட்ட செயலர், ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலர் பதவிகளை வகித்தவர்.

செல்வமோகன்

தென்காசி தொகுதி அதிமுக வேட்பாளராக எஸ். செல்வமோகன் செல்வமோகன் (வயது 46) நிறுத்தப்பட்டுள்ளார். 1989- முதல் அதிமுகவில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். 2010 முதல் தென்காசி தொகுதி செயலர், 2011 முதல் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராக இருந்து வருகிறார்.

முருகையாபாண்டியன்

அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக வேட்பாளராக ஆர். முருகையாபாண்டியன் முருகையாபாண்டியன் (வயது 70) நிறுத்தப்பட்டுள்ளார். 1991-ல் அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ.வாக இருந்தவர். மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலராக பதவி வகித்தவர்.

மனோகரன்

வாசுதேவநல்லூர்(தனி) தொகுதி அதிமுக வேட்பாளராக அ. மனோகரன் மனோகரன் (வயது 37) அறிவிக்கப்பட்டுள்ளார். விஸ்வநாதப்பேரி அதிமுக கிளைச் செயலர், மாநகர் மாவட்ட ஜெ. பேரவை துணைத் தலைவராக பதவி வகித்தவர்.

எப்சி கார்த்திகேயன்

ஆலங்குளம் தொகுதி அதிமுக வேட்பாளராக எப்சி கார்த்திகேயன்எப்சி கார்த்திகேயன் (வயது 45) நிறுத்தப்பட்டுள்ளார். ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவராக 2 முறை பதவி வகித்தார். 2002-ல்தான் அதிமுகவில் சேர்ந்தார். தற்போது அதிமுக பொதுக்குழு உறுப்பினராக உள்ளார்.

இன்பதுரை

ராதாபுரம் தொகுதி அதிமுக வேட்பாளராக இன்பதுரை அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் திசையன்விளை நவ்வலடியைச் சேர்ந்தர். சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார்

ராஜலெட்சுமி

சங்கரன்கோவில் தொகுதி அதிமுக வேட்பாளராக வி.எம். ராஜலெட்சுமி (வயது 30) நியமிக்கப்பட்டுள்ளார். 2004 முதல் 18வது வார்டு இளம்பெண்கள் பாசறை செயலராக இருந்தார். 2015-ல் நகர அதிமுக இணைச்செயலரானார். 2014ஆம் ஆண்டு முதல் சங்கரன்கோவில் நகர் மன்றத் தலைவராக இருந்து வருகிறார்.

ஷேக்தாவூத்

கடையநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளராக கூட்டணிக் கட்சியான தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவனத் தலைவர் ஷேக்தாவூத் ஷேக்தாவூத் (வயது 61) நிறுத்தப்பட்டுள்ளார்.

விஜயகுமார்

நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர்களாக விஜயகுமார் விஜயகுமார் (வயது 45) அறிவிக்கப்பட்டுள்ளார். தற்போது நாங்குநேரில் ஒன்றியச் செயலராக இருக்கிறார். இவரது தந்தை மாணிக்கராஜ் 2001-2006ல் எம்.எல்.ஏவாக பதவி வகித்தவர். இவரது மனைவி அதிமுக மாவட்ட மகளிரணி துணைச் செயலர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+