சூப்பர் சூனியர், ஜூனியருடன் திருவள்ளூர் களத்தில் அதிமுக... வேட்பாளர்கள் பயோடேட்டா
பாஸ்கரன்
திருவள்ளூர் தொகுதி அதிமுக வேட்பாளராக அ.
பாஸ்கரன் (வயது 48) நிறுத்தப்பட்டுள்ளார். முதல்வர் பாதுகாப்புப் பிரிவில் கமாண்டோ வீரராக இருந்த இவர் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு 2001-இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திருவள்ளூர் நகராட்சி 7-வது வார்டில் போட்டியிட்டு நகர்மன்ற உறுப்பினரானார். 2006-2011-இல் 7-வது வார்டு பெண்கள் வார்டாக மாறியபோது அவரது மனைவி தீபா பாஸ்கரன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து 2011 தேர்தலில் அதே வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்று, இன்று வரை திருவள்ளூர் நகர்மன்றத் தலைவராக பதவி வகித்து வருகிறார். அதிமுகவில் திருவள்ளூர் தொகுதி இணைச் செயலாளர்.
பி.எம்.நரசிம்மன்
திருத்தணி தொகுதி அதிமுக வேட்பாளராக பி.எம்.
நரசிம்மன் (வயது 62) அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். 1980, 1984, 2001 ஆகிய முன்று முறை பள்ளிப்பட்டு தொகுதி எம்.எல்.ஏ.வாக வென்றவர். 2001 முதல் 2006 வரை தமிழக அரசின் கொறடாவாக பதவி வகித்தார். 2014-ஆம் ஆண்டு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக 3 மாதங்கள் பதவி வகித்தார். 1990 முதல் ஆர்.கே.பேட்டை ஒன்றிய அதிமுக செயலாளராக தொடர்ந்து 26 ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார்.
டி.தட்சிணாமூர்த்தி
மாதவரம் தொகுதி அதிமுக வேட்பாளராக டி.
தட்சிணாமூர்த்தி (வயது 41) நிறுத்தப்பட்டுள்ளார். இவர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். தற்போது திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அதிமுக கழக துணை செயலாளர், சென்னை மாநகராட்சி 30-வது வார்டு கவுன்சிலர்.
கே.எஸ்.விஜயகுமார்
கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளராக கே.எஸ்.
விஜயகுமார் (வயது 46) நிறுத்தப்பட்டுள்ளார். இவர் கம்மா நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர். 2005 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் வென்று எம்எல்ஏவானர்.
பலராமன்
பொன்னேரி தொகுதி அதிமுக வேட்பாளராக சிட்டிங் எம்.எல்.ஏ. பி.
பலராமன் (வயது 55) அறிவிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக உள்ளார்.
வி.அலெக்ஸாண்டர்
அம்பத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளராக வி.
அலெக்ஸாண்டர் நிறுத்தப்பட்டுள்ளார். இவரது சொந்த ஊர் மதுரை உசிலம்பட்டி. அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.
பெஞ்சமின்
மதுரவாயல்(தனி) தொகுதி அதிமுக வேட்பாளராக
பெஞ்சமின் (வயது 47) அறிவிக்கப்பட்டுள்ளார். 1988 முதல் 1990 வரை அயனம்பாக்கம் கிளைச் செயலாளராகவும், 2002 முதல் 2015 வரை வில்லிவாக்கம் ஒன்றிய செயலாளராகவும் இருந்துள்ளார். கடந்த 2011-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி 145-வது வார்டு மாமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற இவர், தற்போது வரை சென்னை மாநகராட்சியின் துணை மேயராக பதவி வகித்து வருகிறார்.
ஏழுமலை
பூந்தமல்லி (தனி) தொகுதி அதிமுக வேட்பாளராக
ஏழுமலை (வயது 52) நிறுத்தப்பட்டுள்ளார். 1984 முதல் அதிமுக உறுப்பினர். தற்போது பூந்தமல்லி தொகுதி செயலாளராக பணியாற்றி வருகிறார்.
மாபா க.பாண்டியராஜன்
ஆவடி தொகுதி அதிமுக வேட்பாளராக தேமுதிகவில் இருந்து வந்த மாபா
பாண்டியராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த தேர்தலில் விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளராகி வெற்றி பெற்றவர். பிறகு அதிமுகவில் சேர்ந்தார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications