சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் ப்ளஸ் சீனியர்களுடன் திருச்சியில் மோதும் அதிமுக- வேட்பாளர்கள் பயோடேட்டா
வெல்லமண்டி நடராஜன்
திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளராக வெல்லமண்டி என்.
நடராஜன் (வயது 66) நிறுத்தப்பட்டுள்ளார். திருச்சி மாநகர் மாவட்ட அவைத்தலைவராக நீண்டகாலம் பதவி வகித்து வருகிறார். 2000-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு வரை திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலராகவும் பணியாற்றியவர்.
ஆர். மனோகரன்
திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் சிட்டிங் எம்.எல்.ஏ. மற்றும் அரசு தலைமை கொறடா
மனோகரன். இவர் நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர். 1996-2001-ல் திருச்சி மாநகராட்சி கவுன்சிலராகவும் 2001-2006-ல் ஸ்ரீரங்கம் மண்டல குழு உறுப்பினராகவும் இருந்தவர்.
வளர்மதி
ஸ்ரீரங்கம் தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ.
வளர்மதி (வயது 51) மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுகவில் மாவட்ட இணைச் செயலராகவும் பணியாற்றியாற்றியவர்.
சந்திரசேகர்
மணப்பாறை தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ.
சந்திரசேகர் (வயது 50) மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். 1996-ம் ஆண்டு முதல் மருங்காபுரி ஒன்றிய செயலராக இருந்து வருகிறார்.
கலைச்செல்வன்
திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளராக பெல்நிறுவன ஊழியர் கே.வி.டி.
கலைச்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார். 1989அதிமுக ஜெ. ஜா அணிகளாக பிளவுபட்ட போது ஜெயலலிதா அணியில் தீவிரமாக செயல்பட்டவர்.
விஜயமூர்த்தி
லால்குடி தொகுதி அதிமுக வேட்பாளராக
விஜயமூர்த்தி (59) அறிவிக்கப்பட்டுள்ளார். லால்குடி ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலராக இருந்து வருகிறார். இவரது மனைவி சுதாரானி லால்குடி பேரூராட்சி தலைவியாக இருக்கிறார்.
எம்.செல்வராஜ்
முசிறி தொகுதி அதிமுக வேட்பாளராக
செல்வராஜ் (வயது50) நிறுத்தப்பட்டுள்ளார். அதிமுகவில் தற்போது மாவட்ட பிரதிநிதி மற்றும் தா . பேட்டை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவராக இருந்து வருகிறார்.
பரமேஸ்வரி
மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளராக
பரமேஸ்வரி (வயது 38) நியமிக்கப்பட்டுள்ளார். மண்ணச்சல்லூர் ஒன்றிய குழு தலைவராகவும் மாவட்ட மகளிர் அணி இணை செயலராகவும் பதவி வகித்து வருகிறார்.
மைவிழி
துறையூர் (தனி) தொகுதி அதிமுக வேட்பாளராக
மைவிழி (வயது 42) நிறுத்தப்பட்டுள்ளார். உப்பிலியபுரம் பேரூராட்சித் தலைவராக பதவி வகித்து வருகிறார். உப்பிலியபுரம் பேரூர் அதிமுக மகளிர் அணி செயலராக 14 ஆண்டுகாலமாக பொறுப்பு வகித்து வருகிறார்.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications