ரம்ஜான் பிரியாணி.... சாப்பிட்டாச்சா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நண்பர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து சொன்ன கையோடு பிரியாணி சாப்பிட தயாராகி விட்டனர். டுவிட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப்களில் பிரியாணி ஹேஸ்டேக் போட்டு பதிவிட்டு வருகின்றனர்.

பத்தாவது படிக்கும் போது உடன் படித்த பாய் பிரண்டுகள் எல்லாம் இப்போது நினைவுக்கு வருவார்கள். ரம்ஜான் நாளில் பிரியாணி சாப்பிடாவிட்டால் என்ன கொண்டாட்டம் என்பதுபோல ஏகத்துக்கும் கவலைப்படுகிறார்கள் வலைத்தளவாசிகள்.

டுவிட்டரில் கொட்டிக்கிடக்கும் பிரியாணி பதிவுகள் உங்கள் பார்வைக்கு.

பிரியாணி வேணுமா?

ஹேப்பி ரம்ஜான் சொன்னாலே பிரியாணி வேணுமான்னு கேட்குறானே

வாழ்த்துக்கு நன்றி

ரம்ஜான் வாழ்த்து சொன்னா நன்றி சொல்லி முடிச்சிடுறாங்களே

ரம்ஜான் நாளில் சாம்பார் சாதம்

ரம்ஜான் நாளில் சாம்பார் சாதம் சாப்பிட ஒரு ஜென் மனநிலை வேண்டும் என்று கூறியுள்ளார் ஒருவர்

பண்டமாற்று முறை

பிரியாணி கொடுங்க... நாங்க திருப்பதி லட்டு தறோம் என்று கூறியுள்ளார் ஒருவர்.

ஒரு பாயும் கண்ல சிக்கலையே

ரம்ஜான் தினத்தில்தான் பாய் ஃபிரண்டுகளின் நினைவு வரும்.. பாய் பிரண்ட் கண்ல சிக்கலையே என்று தேடி அலைகிறார் ஒருவர்.

புலியன் பிரியாணி

பிரியாணிக்கு எதிர்பார்த்து காத்திருந்தா புலிசாதம் கொடுக்கிறானே என்று கேட்கிறார் ஒருவர்.

பிரியாணி எங்கடா?

காலையிலேயே பிரியாணி வரும்னு எதிர்பார்த்து மதியம் தாண்டிருச்சு... எங்கடா பிரியாணி என்று கேட்கிறார் ஒருவர்.

விஜய் ரசிகரின் ரம்ஜான் வாழ்த்து

மெர்சல் பட தலைப்பை ரம்ஜான் வாழ்த்தாக்கி விட்டார் விஜய் ரசிகர் ஒருவர். பிரியாணி பார்சல் அனுப்புங்களே என்று கேட்டுள்ளார்.

ஒருவாரம் வாழ்த்து சொன்னேனே

பிரியாணிக்காக ஒரு வாரம் வாழ்த்து சொன்னேனே... இப்ப வந்து பிரியாணி இல்லைன்னு சொல்றீயேடா. இது நியாயமா என்று கேட்கிறார் ஒரு வலைஞர்.

யார் யாருக்கு பிரியாணி கிடைத்ததோ தெரியலையே

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Ramzan is being celebrated in Tamil Nadu and all over the world and no need to mention that Biryani is going on full round all over.
Please Wait while comments are loading...