விநாயகர் சதுர்த்திக்கு தயரான பிஸ்கெட் கணபதி... இவர் சாப்பிட இல்ல...

Subscribe to Oneindia Tamil

விநாயகர் சதுர்த்தியை நாடு முழுவதும் கொண்டாடத் தயாராகி வரும் நிலையில் விதம் விதமான வடிவங்களில் விநாயகர்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

பிள்ளையார் என்றாலே அழகான வடிவம் கொண்ட கணபதியும், அவல், பொரி, கொலுக்கட்டை, மோதகம் என சாப்பிடும் பொருட்களும் நினைவுக்கு வரும்.

களிமண்ணில் பிள்ளையார் செய்து வழிபட்டார்கள். வித விதமான மண்களில் கணபதியை பிரம்மாண்டமாக செய்து வழிபாடு செய்தது ஒருபுறம் இருக்க பிஸ்கெட்டில் பிள்ளையாரை செய்து வழிபாடு நடத்துகிறது ‘பார்லி ஜி' பிஸ்கெட் நிறுவனம்.

12 மணிநேரம்

பார்லி ஜி நிறுவனம் 12 மணிநேரம் செலவு செய்து பிஸ்கெட் கணபதியை வடிவமைத்துள்ளது.இந்த பிஸ்கெட் கணபதிக்கு டுவிட்டரில் ஆதரவும் எதிர்ப்பும் பெறுகி வருகிறது.

எல்லாம் மார்கெட்டிங்

பல ஆயிரக்கணக்கான பிஸ்கெட்டுகளைக் கொண்டு இப்படி பிள்ளையாரை வடிவமைத்தது மார்கெட்டிங் டிரெண்ட் என்கின்றனர்.

ஒரு சிலரோ இந்த விநாயகரை விசர்ஜனம் செய்வதன் மூலம் மீன்களுக்கு உணவாகும் என்று கூறியுள்ளனர்.

ஏழைகளுக்கு உணவு

இந்தியாவில் எத்தனையோ ஏழைகள் இருக்க அவர்களுக்கு உண்பதற்கு இந்த பிஸ்கெட்டுகளை வழங்காமல், பிள்ளையார் சிலை செய்தது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

கணபதி பாபா மோரியா

வயது வித்தியாசமின்றி விநாயகருக்கு பக்தர்கள் இருக்கின்றனர். சிறுவர்கள் முதல் வயதானவர்களும் கணபதி பாபா மோரியா பாட்டுப்பாடி கொலுக்கட்டை படையல் செய்து வழிபாடுவார்கள். பிஸ்கெட் கணபதிக்கு டுவிட்டரில் ஆதரவு ஒருபுறம் பெறுக, சாப்பிடும் பொருளில் விநாயகர் செய்யலாமா என்றும் கேட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+