கர்நாடகாவுக்கு காவடி தூக்கும் நிர்மலா சீதாராமனை தமிழக முதல்வர் வேட்பாளராக்க துணியுமா பாஜக?
கர்நாடகாவை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் நிர்மலா சீதாராமனை தமிழக முதல்வர் வேட்பாளராக்குவது குறித்து பாஜக ஆலோசிக்கிறதாம்.
சென்னை: காவிரி பிரச்சனையில் தமிழகத்துக்கு துரோகம் செய்துவிட்டு கர்நாடகாவுக்கு காவடி தூக்கும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக முதல்வர் வேட்பாளராக பாஜக பரிசீலிப்பதாக வெளியான தகவல்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியை பூர்வீகமாக கொண்டவர் நிர்மலா சீதாராமன். தெலுங்கானா மாநிலத்தில் வசித்து வருகிறார். நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களின் கேள்விக்கு தமிழில் பதில் சொல்லி அசத்தியவர்தான்.
ஆனால் தமிழகத்தின் வாழ்வுரிமை சார்ந்த பிரச்சனைகளில் பச்சைதுரோகத்தை செய்கிறவர்தான் நிர்மலா சீதாராமன். காவிரி பிரச்சனையில் மேலாண்மை வாரியம் அமைக்கவே கூடாது என கர்நாடகா எம்.பி.க்களுடன் சேர்ந்து மத்திய அமைச்சர் உமாபாரதியிடம் மனு கொடுத்தவர்தான் இந்த நிர்மலா சீதாராமன்.

எகத்தாள கேள்வி...
அத்துடன் காவிரி பிரச்சனையில் பிரதமர் மோடி ஏன் தலையிட வேண்டும் என எகத்தாளமாக கேள்வி கேட்டவரும் இதே சாட்சாத் நிர்மலா சீதாராமன்தான். தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்றால் உடனே டெல்லியால் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அனுப்பி வைக்கப்படுகிறவர் நிர்மலா சீதாராமன்.

வெறுப்பின் உச்சத்தில்..
ஆனால் தமிழகத்தில் உள்ள யதார்த்தத்தைப் அவர் புரிந்து கொள்ளாமல் பேசி தொடர்ந்து அதிருப்திகளையும் வாங்கிக் கட்டிக் கொண்டுதான் வருகிறார். தமிழகத்தில் நிர்மலா சீதாராமன் நடத்திய அத்தனை செய்தியாளர்கள் சந்திப்பிலும் 'கடுகடு' சிடுசிடுவென ஏதோ ஒருவித வெறுப்பில்தான் பேசிவருகிறார் நிர்மலா சீதாராமன்.

கீழடியில் எதிர்ப்பு
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கீழடி அகழ்வாராய்ச்சி இடத்தைப் பார்வையிட மத்திய அமைச்சர் மகேஷ் சர்மாவுடன் வருகை தந்தார் நிர்மலா சீதாராமன். அப்போது தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத்தை அஸ்ஸாமுக்கு மாற்றியதற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

ஒருமை பேச்சு
இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், அந்த ஒரு ஆளுதான் ஒழுங்கா வேலை பார்ப்பவரா? என ஒருமையில் பேச அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. பாஜகவைப் பொறுத்தவரையில் தமிழகத்துக்கு எதிரான அத்தனை துரோகங்களையும் செய்து வருகிறது. இந்த வரிசையில் கர்நாடகாவுக்கு காவடி தூக்கும் நிர்மலா சீதாராமனை துணிச்சலுடன் தமிழகத்தின் முதல்வர் வேட்பாளராக அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட்










Click it and Unblock the Notifications