இனி 'ஜி' வேண்டாம்... அண்ணா, அக்கா என்று அழையுங்கள் - பாஜகவின் தமிழிசை அக்கா ஆர்டர்
திருப்பூர்: பாஜக தலைவர்கள் தமிழகத்தில் இனி 'ஜி' என்கிற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது. அண்ணா, அக்கா, அம்மா என்றே அழைக்க வேண்டும் என்று திருப்பூரில் நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசியல் தலைவர்கள் உறவு முறை வைத்து பாசத்தோடு அழைக்கின்றனர். திமுக நிறுவனரும் பொதுச்செயலாளருமான அண்ணா தனது தொண்டர்களை தம்பி, உடன்பிறப்பே என்று பாசத்தோடு அழைத்தார். இன்றைக்கு வரைக்கும் அதை தொடர்கிறார் திமுக தலைவர் கருணாநிதி. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தனது தொண்டர்களைப் பார்த்து ரத்தத்தின் ரத்தங்களே என்று அழைத்தார். அது மிகப்பெரிய வெற்றிக்கு வழிவகுத்தது.
காங்கிரஸ் கட்சியினர் அன்னை சோனியா காந்தி என்று அழைக்கின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை அனைத்து தொண்டர்களும் அம்மா என்றுதான் அழைக்கின்றனர். இதே டெக்னிக்கை பயன்படுத்த பாஜக தமிழக தலைவர்களும் முடிவு செய்துள்ளனர்.

வணக்கம் ஜி
வட மாநிலங்களைப் பொருத்தவரை பொதுவாக அரசியல்கட்சித் தலைவர்கள் ஒருவரையொருவர் ‘ஜி' என்று அழைத்து கொள்வது வழக்கம். பாஜக தலைவர்கள் அழைக்கும் ஜி என்கிற வார்த்தை தமிழக மக்களிடம் அந்நியமாக பார்க்கப்படுகிறது. எனவே இனிமேல் ஜி என்கிற வார்த்தையைப் பயன்படுத்தக்கூடாது என பாஜகவினர் முடிவெடுத்துள்ளனர்.

அண்ணன் அவர்களே!
திருப்பூரில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில், பாஜக இணை பொதுச் செயலாளர் இதை வலியுறுத்திக் கூறினார். அதற்கு முன்னராகவே பேசிய பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தனது உரையில் ‘கணேசன்ஜி' என்று அழைத்தார். இதன் பின்னர் தனது தவறை உணர்ந்த தமிழிசை, மீண்டும் கணேசன் அண்ணன் அவர்களே, எச்.ராஜா அண்ணன் அவர்களே என்று கூறி கலகலப்பை ஏற்படுத்தினார்.

அந்நியப்பட வேண்டாம்
இல.கணேசன் எம்.பி., பேசும்போது, "இது நமக்கு சாதாரணமாக தோன்றினாலும், தமிழக மக்களைப் பொருத்தவரை முக்கியமானது. அவர்களிடம் இருந்து நாம் அந்நியப்படுவதில் நமக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. மக்களின் ஆதரவைப் பெற இனி ‘ஜி' என்கிற வாரத்தையை மறந்தும் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது என்று கூறினார்.

உறவுக்கு வாக்கு
தமிழ்நாட்டைப் பொருத்தவரை, திராவிடக் கட்சிகள் அக்கா, அண்ணா, அம்மா, அய்யா போன்ற வார்த்தைகளைத்தான் அதிகம் பயன்படுத்துவார்கள். அந்த பாசம்தான் வாக்குகளாக மாறுகிறது என்பதை உணர்ந்த பாஜக தலைவவர்களும் திராவிட கட்சிகளின் டெக்னிக்கை பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். தமிழிசை அக்கா, ராஜா அண்ணன் எல்லாம் இனி பாசத்தோடு பழகுவார்கள் என்றே நம்புவோம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications