நாஞ்சில் சம்பத்தை முற்றுகையிட முயன்ற பாஜகவினர்! கூண்டோடு தூக்கிய போலீஸார் !கும்பகோணத்தில் பரபரப்பு!
கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நாஞ்சில் சம்பத்தை பாஜகவினர் முற்றுகையிட முயன்ற நிகழ்வு அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாஞ்சில் சம்பத்தை முற்றுகையிட முயன்ற பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
ரோட்டரி சங்கம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக நாஞ்சில் சம்பத் கும்பகோணம் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

நாஞ்சில் சம்பத்
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குறித்து நாஞ்சில் சம்பத் விமர்சித்து வந்தார். இதனிடையே பொதுக்கூட்டங்களில், பாஜக தலைவர்களை ஒருமையில் தரக்குறைவாக பேசி வருவதாக கூறி, இவர் மீது பாஜகவினர் கடும் கொந்தளிப்பில் இருந்தனர்.

கண்டன முழக்கம்
தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்து விடுதியில் தங்கியிருந்ததார் நாஞ்சில் சம்பத். இந்த தகவலை அறிந்து நாஞ்சில் சம்பத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக மாவட்டத் தலைவர் சதீஷ் தலைமையில் ஏராளமான பாஜகவினர் குவிந்து முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். தொடர்ந்து பாஜகவினர் நாஞ்சில் சம்பத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி முழக்கமிட்டனர்.

திமுகவினர் பாதுகாப்பு
நாஞ்சில் சம்பத்தை பாஜகவினர் முற்றுகையிடுகிறார்கள் என்ற தகவலை அறிந்து சில நிமிடங்களில் அங்கு திமுகவினரும் திரளத் தொடங்கினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. கருத்தை கருத்தால் எதிர்கொள்வதை விடுத்து தனி மனிதர் மீது கும்பலாக வந்து தாக்குதல் நடத்த முயல்வது கோழைத்தனம் என திமுகவினரும், நாஞ்சில் சம்பத்தின் சொற்பொழிவுக்கு ரசிகர்களாக இருப்பவர்களும் வாதிட்டனர். காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்ததோடு நாஞ்சில் சம்பத் தங்கியிருக்கும் விடுதிக்கு பாதுகாப்பும் அளித்து வருகின்றனர்.

பொருட்படுத்தவில்லை
பாஜகவினர் தாம் தங்கியிருந்த விடுதியை முற்றுகையிட முயன்ற நிகழ்வை நாஞ்சில் சம்பத் ஒரு பொருட்டாகவே கருதவில்லையாம். இது போன்ற வெற்றுக்கூச்சல்களை எத்தனையோ முறை தாம் பார்த்திருப்பதாகவும் தனது பேச்சை யாராலும் நிறுத்த முடியாது எனவும் அங்கிருந்த திமுகவினரிடம் பேசும் போது கூறியிருக்கிறார்.
இதனிடையே நாஞ்சில் சம்பத்தை பாஜகவினர் முற்றுகையிட முயன்ற நிகழ்வால் கும்பகோணத்தில் அவர் தங்கியிருந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications