For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

1186 மார்க் எடுத்தும் சீட் இல்லை.. மாணவரின் தந்தை போராட்டம்.. அடித்து உதைத்த பாஜகவினர்!

Google Oneindia Tamil News

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரில் பாஜக அரசைக் கண்டித்துப் போராட்டம் நடத்திய மாணவரின் தந்தையை பாஜகவினர் சரமாரியாக அடித்து உதைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கத்தில் பாஜக ஒன்றிய செயற்குழு பொதுக் கூட்டம் நடந்ததது. இந்த நிலையில் கூட்டம் நடந்த இடத்திற்கு வந்த ஐயப்பன் என்பவர் பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

BJP cadres beat +2 student's father

தனது மகன் பாலாஜி +2 தேர்வில் 1186 பதிப்பெண் பெற்றுள்ளதாகவும், ஆனால் நீட்டில் மார்க் குறைந்ததால் மருத்துவ சீட் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு பாஜக மத்திய அரசுதான் காரணம் என்றும் கூறி அவர் போராட்டம் நடத்தினார்.

இதையடுத்து அங்கு கூடியிருந்த பாஜகவினர் ஐயப்பனை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த போலீஸார் ஐயப்பனை மட்டும் கைது செய்து அங்கிருந்து கூட்டிச் சென்றனர். பாஜகவினர் யாரும் கைது செய்யப்படவில்லை.

English summary
BJP cadres beat +2 student's father in Chengam when he protested against Union govt in NEET issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X