மோடி மீதான மணிசங்கரின் விமர்சனத்துக்கு எதிராக பாஜகவினர் போராட்டம்!
சென்னை: குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி மீதான மணிசங்கர் அய்யரின் விமர்சனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் காங்கிரஸ் தலைமையகத்தை பாஜகவினர் முற்றுகையிட முயன்றனர்.
பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பற்றி காங்கிரஸ் எம்.பி. மணிசங்கர் அய்யர் விமர்சித்தார். அவர் டீ விற்க செல்லலாம் அதற்குத்தான் அவர் லாயக்கானவர். அதை நாங்கள் தடுக்க மாட்டோம் என்று கூறியிருந்தார்.
மணிசங்கர் அய்யரின் இந்த விமர்சனத்துக்கு பாரதிய ஜனதாவினர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். மணிசங்கர் அய்யருக்கு எதிராக போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.
சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனுக்கு 100-க்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா தொண்டர்கள் இன்று திரண்டு வந்தனர்.
மத்திய சென்னை மாவட்ட துணைத் தலைவர் ஏழுமலை தலைமையில் ஒரு தள்ளு வண்டியில் டீ கேன்கள் மற்றும் சமோசா கொண்டு வந்தனர். அதை சத்தியமூர்த்தி பவன் முன்பு ரோட்டில் வைத்து விற்றனர். அந்த வழியாக சென்ற ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பொது மக்களுக்கு இலவசமாக டீ, சமோசாக்களை வழங்கினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மணிசங்கர் அய்யரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதையொட்டி 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
சைதாப்பேட்டையில்..
இதே போல் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் தென் சென்னை மாவட்ட பாரதிய ஜனதா சார்பில் மணிசங்கர் அய்யரை கண்டித்து போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் காளிதாஸ் தலைமை தாங்கினார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மணிசங்கர் உருவப்படத்தை செருப்பால் அடித்தனர். போராட்டத்தின் போது டீ விற்றால் தவறில்லை. காங்கிரசை போல் நாட்டை விற்றால்தான் தவறு. மரியாதை தெரியாத மணிசங்கரே மன்னிப்பு கேள் என்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தி இருந்தனர்.
மயிலாடுதுறையில்.
மயிலாடுதுறையை அடுத்த அவயாம்பாள்புரத்தில் மணிசங்கர் அய்யரின் அலுவலகத்தை இன்று காலை 2 பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 5 பேர், பூட்டி இருந்த அலுவலகத்தின் கேட் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார்












Click it and Unblock the Notifications