234 தொகுதிகளுக்கும் பாஜக வேட்பாளர் பட்டியல் தயார்: பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்
சென்னை: 234 தொகுதிகளுக்கும் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் தயாராக உள்ளதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
பாஜக தலைமை அலுவலகமான சென்னை தியாகராயர் நகரில் உள்ள கமலாலயத்தில் அவர் இவ்வாறு கூறினார். மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் 60 சதவீத மக்கள் நடுநிலையாளர்களாக உள்ளனர். கடந்த சட்டசபை தேர்தலை போன்று இந்த சட்டசபை தேர்தல் முடிவு இருக்காது.

திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் மீதும் தமிழக மக்கள் மிகுந்த வெறுப்பில் உள்ளனர். விடிவு காலம் எப்போது வரும் என்று காத்திருக்கின்றனர். தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல. விழித்துக்கொண்டார்கள். இனிமேல் பிழைத்துக் கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்.
தமிழக சட்டமன்றத்திற்கு நடைபெற உள்ள தேர்தலில் 234 தொகுதிகளுக்கும் பாஜக வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. பாஜக தேர்தல் கமிட்டி அங்கீகரித்த பின்னர் கட்சியின் அகில இந்திய தலைமை தான் முடிவுகளை அறிவிக்க வேண்டும்.
அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டதால் பாஜக தனித்துப் போட்டியிடுவதாக அர்த்தமில்லை என்றார். செயற்குழுக் கூட்டம் முடிந்த பின்னர் மார்ச் 21, 22ல் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications