விஜயகாந்த் பிரச்சாரம் செய்யாததே படுதோல்விக்கு காரணம்: பாஜக வேட்பாளர் சுப்ரமணியன்
திருச்சி: விஜயகாந்த் பிரச்சாரம் செய்யாமல் போனதே பாஜகவின் படுதோல்விக்குக் காரணம் என்று ஸ்ரீரங்கம் தொகுதியின் பாஜக வேட்பாளர் சுப்ரமணியன் கூறியுள்ளார்.
பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்வதை விஜயகாந்த் புறக்கணித்திருக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட பாஜக சொற்ப வாக்குகளையே பெற்று பரிதாப தோல்வியை சந்தித்துள்ளது. இந்த முடிவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் வேட்பாளர் சுப்ரமணியன், கூறியதாவது:

விளக்கி சொன்னேமே
இடைத்தேர்தலில் பாஜக சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. பிரச்சாரத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைத்தோம். மத்தியில் ஆளும் பாஜக அரசால் மக்களுக்கு என்னென்ன நன்மை கிடைக்கும் என்பதை விளக்கினோம்.
அவகாசம் போதவில்லை
ஸ்ரீரங்கத்தில் பாஜகவை வெற்றி பெறச் செய்தால் பிரதமரின் மாதிரி நகர திட்டத்தின் கீழ் ஸ்ரீரங்கம் தரம் உயர்த்தப்படும் எனக் கூறினோம். ஆனால், எங்களுக்கு பிரச்சாரம் செய்ய அவகாசம் போதவில்லை.
விஜயகாந்த் வரலையே
தேர்தல் பிரச்சாரத்தை விஜயகாந்த் புறக்கணித்திருக்கக் கூடாது. விஜயகாந்த் பிரச்சாரம் செய்வார் என எதிர்பார்ப்பு நிலவியது. அவர் எங்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யாதது ஏமாற்றமே" என்று கூறியுள்ளார்.
கடைசி நேரத்தில்
ஸ்ரீரங்கம் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் முதல் ஆளாக திமுக வேட்பாளரை அறிவித்தது. அதிமுகவும் உடனடியாக வேட்பாளரை அறிவித்து படைகளை களமிறக்கியது. எல்லாவித பட்டுவாடாக்களும் முடிந்த பின்னர் கடைசியாக வேட்பாளரை அறிவித்தது பாஜக.
வாய் திறக்காத விஜயகாந்த்
தமிழக பாஜக தலைவர் தமிழிசைதான் தேசிய ஜனநாயகக்கூட்டணியின் ஆதரவு பெற்ற வேட்பாளர் என்று கூறினாரே தவிர கடைசி வரை விஜயகாந்த் வாயே திறக்கவில்லை. இதனால் தேமுதிகவினரும் குழம்பித்தான் போனார்கள். எனவேதான் தேமுதிகவினர் வாக்குகள் எதுவுமே பாஜக வேட்பாளருக்கு விழவேயில்லை என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications