அதிமுக குண்டர்கள் ஆபாசமாக பேசி தாக்க முயற்சித்தனர்... வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
கோவை: துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்புகையில், அதிமுக குண்டர்கள் தன்னை ஆபாசமாகப் பேசி தாக்க முயற்சித்ததாக கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளரான வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர்களில் முக்கியமானவர் வானதி சீனிவாசன். இவர் கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.
நேற்று இவர் கோவையில் உள்ள ஜெயின் கோயிலுக்கு அருகே துக்க நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்று திரும்பும் போது, அதிமுக தொண்டர்கள் சிலரால் தாக்கப்பட்டார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும் அவரது கார் பலத்த சேதமடைந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய தாக்குதல் நடத்தியவர்களையும் அவர்கள் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக குண்டர்கள் சிலரே தன்னை ஆபாசமாகப் பேசி தாக்க முயற்சித்ததாக குற்றம் சாட்டியுள்ளார் வானதி. மேலும் இது தொடர்பாக அவர் கூறுகையில், "துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு வெளியே வந்த என்னை கவுன்சிலரோடு சேர்ந்து கொண்டு சுமார் 40 அதிமுக குண்டர்கள் என்னை அங்கிருந்து வெளியேற விடாமல் தடுத்தனர். அப்போது மோசமான வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்தினர்.
பின்னர் வேறொரு வாகனம் மூலம் அங்கிருந்து நான் வெளியேற முயற்சித்தேன். அப்போது அந்தக் காரையும் அவர்கள் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதில் கார் கண்ணாடிகள் உடைந்தன. வன்முறைக்கு முயற்சிப்பது போல, ஆபாசமாகப் பேசி, ரகளையில் அவர்கள் ஈடுபட்டனர்.
Video: This is the Car I'm sitting & the men surrounding are AIADMK men. I strongly condemn this attack from AIADMK. pic.twitter.com/1PpMQP8cz5
— Vanathi Srinivasan (@VanathiBJP) May 15, 2016
இது அதிமுகவின் தோல்வி பயத்தை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது. அதோடு பெண் வேட்பாளரை அச்சுறுத்தலாம் என்ற எண்ணமும் தெரிகிறது. என்னுடன் வந்த பெண் நிர்வாகியையும் அவர்கள் ஆபாசமாகப் பேசி, புடவையைப் பிடித்து இழுத்து தாக்கினார்கள். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். மேலும், இந்தத் தாக்குதலில் காயமடைந்த பாஜக நிர்வாகிகள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியாளரிடமும், தேர்தல் அதிகாரியும் புகார் அளிக்க உள்ளோம். என்னைத் தாக்கிய கவுன்சிலர் தனது வீட்டிலும், அலுவலகத்திலும் பணத்தை பதுக்கி வைத்து வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்து வருகிறார்' என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
-
அதிமுக கூட்டணியில் தவெக விஜய்? மத்திய அமைச்சர் எல்.முருகன் சொன்ன பதிலால் பரபரப்பு! -
காதுக்கு வந்த தகவல்.. என்ன நடந்தாலும் விடக்கூடாது.. செந்தில் பாலாஜி போட்ட சபதம்.. என்னாச்சு? -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலர் தாண்டாத வரை.. பெட்ரோல், டீசல் விலை உயராது.. மத்திய அரசு விளக்கம்! -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங்












Click it and Unblock the Notifications