சசிகலா முதல்வராவதை பாஜகவால் தடுக்க முடியாது.. சொல்கிறார் திருநாவுக்கரசர்
சசிகலா தமிழக முதல்வராவதை பாஜகவால் தடுக்க முடியாது என திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா முதல்வராக பதவியேற்பதை பாஜக.,வால் தடுக்க முடியும் என நினைக்கவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து, அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் பிப்ரவரி 7 அல்லது 9-ம் தேதி முதலமைச்சராக பதவி ஏற்பார் என கூறப்பட்டுவந்தது. இதனிடையே சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் சசிகலா முதல்வராக பதவியேற்க ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தது.
இதற்கிடையே ஆளுநரின் தமிழக பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. மேலும் பதவி ஏற்பு குறித்து தேதி எதுவும் ஆளுநர் வழங்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் சசிகலா பதவியேற்பதில் சிக்கல் உருவாகியுள்ளது. சசிகலா முதல்வராக பதவியேற்பதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் அளித்த பேட்டியில், மத்தியில் உள்ள பாஜக அரசு அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்பதை தடுக்க முடியும் என நினைக்க வில்லை என்று தெரிவித்துள்ளார். அதோடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து இப்போது பேசுவதால் எந்த பயனும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications