ரசித்து ருசித்து சாப்பிட நல்ல மீ்ன் நம்ம "நமோ" மீன்.. வாங்கம்மா வாங்க.. வாங்கய்யா வாங்க.. !
உலக மீனவர் தினத்தை முன்னிட்டு மத்திய சென்னை மாவட்ட பாஜக சார்பில் நமோ மீன் கண்காட்சி மற்றும் மீன் உணவுத் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை : உலக மீனவர் தினத்தை முன்னிட்டு மத்திய சென்னை மாவட்ட பாஜக சார்பல் நமோ மீன் கண்காட்சி மற்றும் மீன் உணவுத் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தங்களது கடின உழைப்பின் மூலம் அந்நிய செலாவணியை அதிகமாக ஈட்டித்தரக்கூடிய மீனவர்களை கவுரவப்படுத்தும் வகையில், இந்த நாள் கொண்டாடப்படுகிறது. மீனவர்களின் கோரிக்கையின் பயனாக இந்த வருட மீனவர் தினம் அரசு விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் குளச்சல் கடற்கரையில் மீனவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் பல போட்டிகளை நடத்திட மீன்வளத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
இதே போன்று கடல் ஒட்டியுள்ள பகுதிகளில் அரசு சார்பில் மீனவர் தின கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பாஜகவின் மத்திய சென்னை மாவட்ட பாஜக மீனவர் அணி சார்பில் மீன் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாஜகவின் ஏற்பாடு
சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லம் அருகே நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சிக்கு நமோ மீன் கண்காட்சி மற்றும் மீன் உணவுத் திருவிழா என்று பெயரிடப்பட்டுள்ளது. பாஜக சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனரில் பிரதமர் நரேந்திர மோடி கையில் மீனை தூக்கிக் கொண்டு நிற்பது போல டிசைன் செய்யப்பட்டுள்ளது.

சென்டிமென்ட் தேடும் பாஜக
மேலும் பேனரில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், சி.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரின் படங்களும் இடம்பெற்றுள்ளன. மீனவர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக இந்த பேனர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மீன்களின் அணிவகுப்பு
அது சரி நமோ கண்காட்சியில் என்ன சிறப்பு என்கிறீர்களா பிரெஷ்ஷான மீன்கள், அதன் பெயர் விளக்கத்தோடு கடை விரித்து வைக்கப்பட்டுள்ளது. கருக்கான், ஜிலேபி, பெரிய சுறா, பாறை என்று மீன்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

கண்காட்சியை தொடங்கி வைத்த தமிழிசை
இந்த கண்காட்சி மற்றும் மீன் உணவுத் திருவிழாவை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்துள்ளார். சி.பி.ராதாகிருஷ்ணன், டால்பின் ஸ்ரீதர், மீனவர் அணித் தலைவர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
-
அடுத்த 60 நாட்கள் ரொம்ப முக்கியம்.. அமெரிக்கா ஈரான் போரில் மாற்றம்! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications