இங்கிட்டு கழகங்கள் இல்லாத ஆட்சி- அங்கிட்டு கழக அரசுகளின் திட்டங்களை காபி அடிச்சு பட்ஜெட்..பலே பாஜக!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கழகங்களே இல்லாத ஆட்சி அமைப்போம் என முழக்கத்தை எழுப்பி திசைஎங்கும் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறது பாஜக. இன்னொரு பக்கம் கழக அரசுகளின் பார்முலாவை காபி அடித்து பட்ஜெட்டில் கோர்த்துவிட்டிருக்கிறது பாஜக.

காங்கிரஸ் கொள்கைகள் இந்தியாவுக்கு தேவை இல்லை என கூறி திட்டக் கமிஷனை கலைத்து நிதி ஆயோக்கை உருவாக்கியது மத்திய அரசு. அதேநேரத்தில் காங்கிரஸ் கொண்டுவர தயங்கி ஜிஎஸ்டியை கொண்டு வந்து கடும் அதிருப்தியை சம்பாதித்தது மத்திய பாஜக அரசு.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் மூலம் ஒட்டுமொத்தமாக பெரும் அதிருப்தியை எதிர்கொண்டிருக்கிறது பாஜக. இந்த நிலையில் தமது அரசின் கடைசி முழுமையான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் அருண்ஜேட்லி அண்மையில் தாக்கல் செய்தார்.

திராவிட அரசுகளின் காப்பி

திராவிட அரசுகளின் காப்பி

கிராமப்புற ஏழை எளிய வாக்காளர்களை குறிவைக்கும் பல்வேறு அறிவிப்புகள் இதில் இடம்பெற்றிருந்தன. உண்மையை சொல்வதானால் இந்த அறிவிப்புகளில் பெரும்பாலானவை தமிழகத்தில் திராவிட அரசியல் பேசும் கட்சிகளால் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

மத்திய அரசின் மருத்துவ காப்பீடு

மத்திய அரசின் மருத்துவ காப்பீடு

திமுக அரசு கொண்டு வந்த கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை உலகின் மிகப் பெரிய மருத்துவ காப்பீடு திட்டம் என தம்பட்டம் அடித்துள்ளது பாஜக. தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்க நீதிக்கட்சி காலம் முதலே பல சட்டங்களை நிறைவேற்றியது தமிழகம். சிப்காட், சிட்கோ மூலம் எண்ணற்ற தொழில்கள் தொடங்கவும் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் வழிகோலியது திராவிட அரசுகள்.

தமிழகத்தில் வெற்றிகரமாக நடைபெறுகிறது

தமிழகத்தில் வெற்றிகரமாக நடைபெறுகிறது

மகளிர் சுய உதவிகளுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு என்பது தமிழகத்தில் பல 10 ஆண்டுகளுக்கு முன்னரே நடைமுறைக்கு வந்துவிட்ட ஒன்று. இப்படி கழகங்கள் எந்த உருப்படியான நலத் திட்டங்களையும் கொண்டுவராமல் தமிழகத்தை நாசமாக்கிவிட்டது என ஒப்பாரி வைக்கிறது பாஜக.

மக்கள் ஏற்கமாட்டார்கள்

மக்கள் ஏற்கமாட்டார்கள்

மறுபுறமோ சந்தடி சாக்கில் திராவிட அரசுகளின் வெற்றி பார்முலாவை காப்பியடித்து ஆட்சியை தக்க வைக்க பகீரத பிரயத்தனம் செய்கிறது பாஜக. இத்தகைய நலத்திட்டங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் தமிழக மக்களை பாஜகவின் மத்திய பட்ஜெட் எந்த வகையிலும் ஈர்க்கப் போவதில்லை என்பதுதான் நிதர்சனம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
National Health Protection Schem was announced by Finance Minister Arun Jaitley in Budget. But It is copying from the TamilNadu Govt's Kalaignar Insurance Scheme.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற