யாரிடமும் பேரம் பேச வேண்டிய நிலையில் பாஜக இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன்
சென்னை: எந்த கட்சியுடனும் பேரம் பேச வேண்டிய நிலையில் பாஜக இல்லை என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தேமுதிகவுடன் பாஜக பேரம் பேசியதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறிய குற்றச்சாட்டுக்கு பாஜக மூத்த தலைவரும், மத்திய இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேமுதிகவுடன் பாஜக பேரம் பேசியதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறிய குற்றச்சாட்டு மோசமானது. எந்த ஆதாரமும் இல்லாமல் இப்படி ஒரு குற்றச்சாட்டை வைகோ முன்வைத்துள்ளார். இதன் மூலம், வைகோ மிக மோசமான முறையில் தேமுதிகவை அவமதித்துள்ளார்.
யாரிடமும் பேரம் பேச வேண்டிய நிலையில் பாஜக இல்லை.சந்தை பேரம் பேசுவதற்கு மற்றவர்கள் தயாராக இருக்கலாம். நாங்கள் தயாராக இல்லை. விலை பேசக் கூடிய ஒரு பொருளாக தேமுதிக இருக்கிறது என்று சொல்வதே எவ்வளவு பெரிய மரியாதை என்று அவர்கள் புரிந்துகொண்டால் சரி. தேமுதிகவை குறைத்து மதிப்பிட்டதையே வைகோவின் கருத்து உணர்த்துகிறது. இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications