மெக்கா மசூதி விபத்துக்கு பேஸ்புக்கில் 'மகிழ்ச்சி' வெளிப்படுத்திய தமிழக பாஜக நிர்வாகி கைது!
மதுரை: மெக்கா மசூதியில் ஏற்பட்ட விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஹஜ் பயணிகள் உயிரிழந்த நிலையில், அதற்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையில், பேஸ்புக்கில் கருத்து பதிவு செய்த தமிழக பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
மதுரை அருகேயுள்ள திருமங்கலத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது பேஸ்புக் பதிவில், மெக்கா மசூதியில் சமீபத்தில் நடந்த விபத்தில் முஸ்லிம்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை வரவேற்று மகிழ்ச்சியடைவதாக கருத்து பதிவு செய்திருந்தார்.
இதை ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சில முஸ்லிம் பேஸ்புக் பயனாளிகள் பார்த்து, அந்த தகவலை, திருமங்கலத்திலுள்ள முஸ்லிம்களுக்கு தெரிவித்துள்ளனர். திருமங்கலத்தை சேர்ந்த அஜ்மிர் அலி என்பவர், பேஸ்புக் பதிவு குறித்து போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்துள்ள காவல்துறை, வேல்முருகனை கைது செய்து, 153ஏ, 295ஏ, 505(1) (c) மற்றும் 505 (2) உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. விசாரணையின்போது வேல்முருகன் தகவல் தொழில்நுட்ப பாடத்தில் இளநிலை பட்டம் பயின்றவர் என்பதும், திருமங்கலத்தில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்திவருபவர் என்பதும் தெரியவந்துள்ளது.
சர்ச்சைக்குறிய அந்த பேஸ்புக் கருத்து அவரது பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி, தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயற்குழு உறுப்பினர் பதவியை அக்கட்சி இவருக்கு வழங்கியுள்ளது. இந்நிலையில் வேல்முருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications