தமிழக பாஜக வேட்பாளர்கள் இவர்கள்தான்?
சென்னை: தமிழகத்தில் பாஜக கூட்டணியில் தொகுதி எண்ணிக்கை பங்கீடு சுமூகமாக முடிந்துள்ளது. தலைவர் ராஜ்நாத்சிங், யாருக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என அறிவித்துள்ளார்.
பாஜக கூட்டணியில் தே.மு.தி.க.-14, பா.ஜ.க.-8, பா.ம.க.-8, ம.தி.மு.க-7, கொங்கு நாடு கட்சி-1, இந்திய ஜனநாயக கட்சி-1 என்ற ரீதியில் 39 தொகுதிகளிலும் பங்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாஜக போட்டியிடும் 8 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை பா.ஜ.க.வில் ஏற்கனவே தேர்வு செய்து விட்டனர். அந்த வேட்பாளர்கள் விவரம்:

யாருக்கு எந்த தொகுதி
தென்சென்னை- இல.கணேசன், கன்னியாகுமரி- பொன்.ராதாகிருஷ்ணன், கோவை- வானதி சீனிவாசன், ராமநாதபுரம்- கருப்பு முருகானந்தம், சிவகங்கை- எச். ராஜா வேலூர்- தமிழிசை சவுந்திரராஜன், நீலகிரி- ஜி.கே.செல்வக்குமார், தஞ்சாவூர்- பி.சி ராதாகிருஷ்ணன்
கைமாறிய தொகுதிகள்
இதில் ஸ்ரீபெரும்புதூர், திருப்பூர், தென்காசி தொகுதிகளை பாஜக குறிவைத்திருந்தது. ஆனால் இரண்டு தொகுதி மதிமுகவிற்கும், ஒரு தொகுதி தேமுதிகவிற்கும் ஒதுக்கப்பட்டுவிட்டது. இதனால் தமிழிசை சவுந்திரராஜன் வேலூர் தொகுதிக்கு இடம்மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
பி.சி.ராதாகிருஷ்ணன்
கோவையில் போட்டியிட முன்னாள் மாநில தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் சொந்த ஊர் என்பதால் கோவையில் போட்டியிட வானதி சீனிவாசன் தீவிரமாக உள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே தஞ்சாவூர் தொகுதியில் பி.சி.ராதாகிருஷ்ணனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ!












Click it and Unblock the Notifications