குமரி, கோவை மாவட்டத்தில் பாஜக அபார வளர்ச்சி... ஜூவி கருத்துக்கணிப்பு
சென்னை: கன்னியாகுமரி, கோவை மாவட்டங்களில் பாஜகவிற்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளதாக ஜூனியர் விகடன் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. குமரி மாவட்டத்தில் 25 சதவிகிதம் பேர் வரை பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சட்டசபை தேர்தலில் பாஜக சில உதிரிக்கட்சிகளை இணைத்துக்கொண்டு கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. பாஜக 157 தொகுதிகள் வரை வேட்பாளர்களை களம் இறக்கியுள்ள என்றாலும், பெரும்பாலான தொகுதிகளில் 2 சதவிகிதம் வாக்கு வங்கிகள் கூட இல்லை என்று ஜூனியர் விகடனின் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்திலும், உதகமண்டலம் வேதாரண்யம், தி.நகர், வேளச்சேரி ஆகிய தொகுதிகளிலும் பாஜகவிற்கு 15 சதவிகிதத்திற்கும் மேல் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடும் விருகம்பாக்கத்தில் 10 சதவிகிதம் பேர் மட்டுமே பாஜகவிற்கு வாக்களிப்போம் என்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பாஜகவிற்கு ஆதரவு அதிகம் உள்ள தொகுதிகள்:
கிள்ளியூர் - 26%
குளச்சல் - 25%
கோவை தெற்கு - 23%
பத்மநாபபுரம் - 22%
வேதாரண்யம், கன்னியாகுமரி 17%
விளவங்கோடு, பல்லடம் - 16%
தி.நகர் - 15%
குன்னூர் - 12%
நாகர்கோவில், உதகமண்டலம், வேளச்சேரி, கவுண்டம்பாளையம் - 11%
கூடலூர் (தனி) - 8%
விருகம்பாக்கம், தூத்துக்குடி, திருப்பூர் வடக்கு, சிங்காநல்லூர், - 10%
விருதுநகர், திருச்செந்தூர், சூலூர், - 9%
ஸ்ரீவைகுண்டம், ராதாபுரம், கோவை வடக்கு - 8%
மேட்டுப்பாளையம், சோழிங்கநல்லூர், திருப்பூர் தெற்கு, ராமநாதபுரம் - 7%
கும்மிடிப்பூண்டி, சிவகங்கை,தென்காசி,குளித்தலை, திருத்துறைப்பூண்டி, திருப்போரூர், திருவொற்றியூர்- 6%
ஆலந்தூர், விளாத்திக்குளம், திருவள்ளூர், சைதாப்பேட்டை,ஸ்ரீபெரும்புதூர், பெருந்துறை, கோபி, பவானி, மதுரை மேற்கு, காரைக்குடிஉள்ளிட்ட பல தொகுதிகளில் 5 சதவிகிதம் வாக்காளர்களின் ஆதரவு உள்ளது.
60க்கும் மேற்பட்ட தொகுதிகளில் 1 முதல் 3 சதவிகித ஆதரவு மட்டுமே உள்ளது. 50 தொகுதிகளுக்கு மேல் 3 முதல் 4சதவிகித வாக்காளர்களின் ஆதரவு உள்ளது. கம்பம், பாப்பிரெட்டிபட்டி தொகுதிகளில் பாஜகவிற்கு ஆதரவாளர்களே இல்லை என்று ஜூனியர் விகடன் கருத்துக்கணிப்பு கூறியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications