தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் பின்னடைவுக்கு வைகோவே காரணம் - எச்.ராஜா சுளீர் பேட்டி
மதுரை: கடந்த சட்டசபைத் தேர்தலில் தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் பின்னடைவுக்கு மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோவே காரணமாகிவிட்டார் என பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா கூறினார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எச். ராஜா, தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும். தமிழகத்தில் தடை விதிக்கப்பட்ட ஜல்லிக் கட்டு, ரேக்ளா ரேஸ் போன்றவற்றை மீண்டும் நடத்துவதற்கு புதிய சட்டம் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

வருகிற மழைக்கால கூட்ட தொடரில் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த சட்டம் நிறை வேற்றப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லா சட்டம் கொண்டு வரப்படும்.
சென்னை பொறியாளர் சுவாதி படுகொலை நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இருக்கிறது. இதை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பிரதான ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த மத்திய அரசு ரூ.40 கோடியை ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகளையும் தொடங்கிவிட்டது.
தமிழகத்தை பொறுத்த வரை சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. அதனால் குற்றவாளிகளை ஒடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றத்தில் நிறுத்தப்படும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை பெற்றுத்தர வேண்டும். கொலை செய்தால் ஜாமீனில் வெளியே வந்து விடலாம் என்ற நிலை மாற வேண்டும்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மிகவும் மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ளன. அக்கட்சிகளின் பின்னடைவுக்கு மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரான வைகோவே காரணம். அவரது செயல்பாடு அக்கட்சிகளின் தோல்விக்கு வழிவகுத்துவிட்டன. இவ்வாறு அவர் கூறினார்.
-
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
“தவெக ஆட்சி அமைந்ததிலிருந்து கமிஷன், கரெப்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை”.. விஜய்யை புகழ்ந்த வைகோ! -
இடைத்தேர்தலில் களமிறங்கும் வைகோ? முதல்வர் விஜய் உடன் சந்திப்பு.. நெருங்கும் மதிமுக - தவெக! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
திருட்டு நடக்கிறது என்பதால் மால்களை மூடிவிடலாமா? மத்திய அரசுக்கு நக்கலாக கேள்வி எழுப்பிய டெலிகிராம் -
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?"












Click it and Unblock the Notifications