பாமக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி.. 2 'லிஸ்ட்'டுடன் பாஜக ரெடி!
சென்னை: கூட்டணியில் பாமக இருந்தாலும் சரி அல்லது விலக முடிவெடுத்தாலும் சரி, எத்தகைய சூழ்நிலையையும் சமாளிக்கும் வகையில் பாஜக 2 விதமான தொகுதிப் பங்கீட்டு பட்டியலுடன் தயாராகி விட்டதாம்.
இது நாள் வரை பாமக மற்றும் தே்முதிக இழுத்த இழுப்புக்கெல்லாம் போய் வந்த பாஜக தற்போது வெ்றுத்து விரக்தி நிலைக்குப் போய் விட்டது. விரக்தி நிலைக்குப் போய் விட்டதால் இனி என்ன நடந்தாலும் பரவாயில்லை என்ற பக்குவத்திற்கு வந்து விட்டதாம்.

எனவே இன்று பாமக எடுக்கப் போகும் முடிவுக்கேற்ப தானும் ரியாக்ஷன் கொடுக்க அது தயாராகி விட்டதாம்.
கையில் இரண்டு பட்டியலுடன் பாஜக ரெடியாக இருப்பதாக கூறுகிறார்கள். அதாவது பாமக கூட்டணியில் நீடித்தால் அதற்கேற்ப ஒரு தொகுதிப் பங்கீடு பட்டியல் மற்றும் பாமக கூட்டணியை விட்டு விலகினால் அதற்கேற்ப இன்னொரு பட்டியல் என இரண்டு விதமான பட்டியலை பாஜகவினர் ஏற்கனவே தயாரித்து விட்டார்களாம்.
பாமக ஒரு வேளை கூட்டணியில் நீடித்தால் ஒரு சில சமரசங்களுடன் தொகுதிப் பங்கீட்டுப் பட்டியலை வெளியிட்டு பிரச்சினையைத் தீர்ப்பது என்பது பாஜகவின் திட்டம்.
அதேசமயம், பாமக வெளியேற முடிவு செய்தால், அதற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை தனக்கும், தேமுதிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கும் பிரித்துக் கொடுத்து தொகுதிப் பங்கீட்டை முடிவுக்குக் கொண்டு வந்து சட்டுப்புட்டென்று பிரசாரத்தில் குதிப்பது என்பது பாஜகவின் இன்னொரு திட்டமாகும்.
தற்போதைய நிலையில் பாமகவின் முடிவு குறித்து கிஞ்சித்தும் பாஜக அச்சப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.
-
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி












Click it and Unblock the Notifications