காவிரி தீர்ப்பு இதுதான் என பாஜகவுக்கு முன்கூட்டியே தெரியும்?12 நாட்களுக்கு முன்பே சொன்ன சு.சுவாமி!
காவிரி தீர்ப்பு இப்படித்தான் என தெரிந்ததாலேயே சு.சுவாமி 12 நாட்களுக்கு முன்னே காவிரி நீர் தமிழ்நாட்டு இல்லை என சொல்லிவிட்டார் போல.
Recommended Video

சென்னை: காவிரி நதிநீர் தீர்ப்பு இதுதான் என பாஜகவுக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கிறது. அதனால்தான் பாஜக மூத்த தலைவரும் அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி 10 நாட்களுக்கு முன்னரே தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்காது என பட்டவர்த்தனமாக கூறியிருந்தார்.
சென்னை விமான நிலையத்தில் கடந்த 4-ந் தேதியன்று செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி தெனாவெட்டாக, காவிரி நீர் வேண்டுமா? தண்ணீர் வேண்டுமா? காவிரி நீர் எனில் கிடைக்காது; தண்ணீர் வேண்டுமானால் கடல் நீரை நன்னீராக்கி என்னால் தர முடியும். முதல்வர் எடப்பாடி எனக்கு வேண்டுகோள் விடுத்தால் இஸ்ரேலிடம் பேசி தொழில்நுட்பங்களை வாங்கி தருவேன் என கூறியிருந்தார்.

காவிரி நதிநீர் தீர்ப்பு வர இருந்த நேரத்தில் சுப்பிரமணியன் சுவாமியின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்போது சுப்பிரமணியன் சுவாமி கூறியது போலவே தமிழகத்தின் காவிரி நீர் உரிமை காவு கொள்ளப்பட்டுவிட்டது.
அப்படியானால் பாஜக தலைவர்களுக்கு காவிரி நதிநீர் தீர்ப்பு இப்படித்தான் வரப்போகிறது என முன்கூட்டியே தெரிந்திருக்கிறது. அதனால்தான் காவிரி நீர் கிடைக்காது என பேசியிருக்கிறார்கள்.
பாஜகவைப் பொறுத்தவரையில் தமிழகம் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. கர்நாடகாவில் அரசியல் அறுவடை செய்யப்பட வேண்டும் என்பதுதான் நிலைப்பாடு. அதனால்தான் காவிரி நதிநீரில் தமிழகத்தின் உரிமையை திட்டமிட்டே பலியெடுத்திருக்கிறார்கள் என்பதுதான் சுப்பிரமணியன் சுவாமியின் 12 நாட்களுக்கு முந்தைய பேட்டி சுட்டிக்காட்டுகிறது.












Click it and Unblock the Notifications