திமுகவின் 'ஆட்சி கலைப்பு' கனவை பனால் ஆக்க பாஜக பக்கா ப்ளான்

ஆட்சி கலைந்துவிடும் என்ற திமுகவின் கனவை தவிடுபொடியாக்க பாஜக வியூகம் வகுத்து வருகிறதாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜனாதிபதி தேர்தல் முடிந்த பின்னர் ஆட்சி கவிழும் என்ற திமுகவின் கனவு பலித்துவிடக் கூடாது என்பதில் படுதீவிரமாக இருக்கிறதாம் பாஜக.

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, புதிய அரசின் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கொண்டார் எடப்பாடி பழனிசாமி. ஆட்சிக்கு ஆதரவாக 122 எம்.எல்.ஏக்கள் வாக்களித்ததால், முதல்வராக ஆட்சியைத் தொடர்ந்தார்.

இதன்பிறகும், சட்டசபையில் தொடர்ந்து கூச்சல், குழப்பம் என எல்லை மீறிச் சென்று கொண்டிருந்தது. மீண்டும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு, 40 நாட்கள் இருக்கின்றன. அதற்குள் அ.தி.மு.கவுக்குள் ஏற்பட்டுள்ள குழப்பத்தால், ஆட்சி கலைந்துவிடும் என நினைக்கிறது திமுக.

எடப்பாடி தாக்கு

எடப்பாடி தாக்கு

ஆனால் தற்போது தினகரனை நோக்கிச் சென்ற எம்.எல்.ஏக்களும் எடப்பாடி பக்கம் வந்துவிட்டனர். திமுகவின் கனவு பலிக்காதது குறித்துப் பேட்டியளித்த எடப்பாடியும், அ.தி.மு.க ஆட்சியை கலைக்கும் முயற்சி தோல்வி அடைந்ததால், விரக்தியில் மு.க.ஸ்டாலின் புதிது புதிதாக பேசி வருவதாக குறிப்பிட்டார்.

திமுக கனவுக்கு செக்

திமுக கனவுக்கு செக்

திமுகவைப் பொறுத்தவரையில் சட்டசபைத் தேர்தலில் கை நழுவிய ஆட்சியை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என நினைக்கிறது. ஆனால் பா.ஜ.கவோ, திமுகவின் அந்த கனவு மட்டும் நிறைவேறாமல் இருக்க எந்த எல்லைக்கும் போகலாம் என கணக்குப் போடுகிறது.

குழப்பம் நீடிக்க வேண்டும்

குழப்பம் நீடிக்க வேண்டும்

அதாவது அ.தி.மு.கவின் மூன்று அணிகளையும் சேரவிடாமல், மூவருக்குள்ளும் குழப்பம் நீடிக்க வேண்டும்- இந்த சண்டை வலுத்துக் கொண்டே இருக்கும்; ஆட்சிக்கும் சிக்கலும் வராது; அப்படி செய்யும்போது திமுகவின் 'ஆட்சி கலைப்பு' கனவு தகர்ந்து போகும் என்பதுதான் பாஜகவின் திட்டம்.

4 ஆண்டுகாலம் நீடிக்கும்?

4 ஆண்டுகாலம் நீடிக்கும்?

மேலும் நீட் தேர்வு, உதய் மின்திட்டம் உள்பட மத்திய அரசின் அனைத்துத் திட்டங்களிலும் அ.தி.மு.கவும் தன்னை இணைத்துக் கொள்கிறது. இப்படியொரு அரசு நீடிப்பதுதான் நமக்கு சாதகமானது' என நினைக்கிறது பாஜக. தங்களுக்கு சாதகமாக அரசியல் சூழல்கள் மாறும் வரையில், இந்த அரசு நீடித்துக் கொண்டே இருக்கும் என்கின்றன டெல்லி வட்டாரங்கள். இதனால் எடப்பாடி அரசு 4 ஆண்டுகாலம் நீடிக்கவும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+