இந்தியாவின் பெயரை "பாரதம்" என மட்டுமே மாற்ற வேண்டும்: மதிமுகவுக்கு பாஜக தலைவர் பதில்
நாகர்கோவில்: நாட்டின் பெயரை "இந்திய ஐக்கிய நாடுகள்" என்று மாற்றுவதற்கு பதிலாக "பாரதம்" என்றுதான் மாற்ற வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் பொன் .ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன். தமிழகத்தில் கூட்டணி வெற்றிகரமாக ஏற்பட்டுவிட்டதைத் தொடர்ந்து திருப்பதியில் மொட்டை போட்ட கையோடு நேற்று நாகர்கோவில் வந்தால் பொன்.ராதாகிருஷ்ணன்.

அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 272 தொகுதிகளைக் கைப்பற்றும் என்றார். அப்போது பாஜகவின் கூட்டணிக் கட்சியான மதிமுக தமது தேர்தல் அறிக்கையில் நாட்டின் பெயரை இந்திய ஐக்கிய நாடுகள் என மாற்றம் செய்வோம் எனக் கூறியுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த பொன். ராதாகிருஷ்ணன், நாட்டின் பெயரை மாற்ற வேண்டுமெனில் "பாரதம்" என்றுதான் மாற்ற வேண்டும் என்றார். மேலும் நாடு முழுதும் உள்ள முதல்வர்களின் கருத்துக்களை எடுத்துக்கொண்டு, மாநிலத்தின் உணர்வுகளை புரிந்து கொண்டு பணிபுரிபவராக பிரதமர் இருக்க வேண்டும் என்று நரேந்திரமோடி கூறியுள்ளதாகவும் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications