லஞ்சம், ஊழலுக்கு எதிரான கட்சி பா.ஜ.க... இல.கணேசன்
லஞ்சம், ஊழலுக்கு எதிரான கட்சியான பாரதிய ஜனதா கட்சி இருக்கிறது என இல. கணேசன் கூறினார்.
மதுரை: பாஜகவைப் பொருத்தவரை லஞ்சம், ஊழலுக்கு எதிரான கட்சி மட்டுமல்ல, அதை அனுமதிக்காத கட்சியும் கூட. இதை வேறு கட்சிகள் பகிரங்கமாக அறிவிக்க இயலாது என பா.ஜ.க. மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான இல.கணேசன் தெரிவித்தார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த இல.கணேசன் கூறியதாவது: திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலின் வெற்றி, தோல்வியால் தமிழக அரசுக்கு எவ்வித பாதிப்பும் வரப்போவதில்லை. ஆட்சியில் எந்தவொரு மாற்றமும் ஏற்படப்போவதில்லை. அதேநேரம், நல்ல கட்சி, சிறந்த தலைவர், நேர்மையான வேட்பாளர் யார் என்பதை எண்ணிப் பார்த்து வாக்களிக்க வேண்டும்.

பாஜகவைப் பொருத்தவரை லஞ்சம், ஊழலுக்கு எதிரான கட்சி மட்டுமல்ல, அதை அனுமதிக்காத கட்சியும் கூட. இதை வேறு கட்சிகள் பகிரங்கமாக அறிவிக்க இயலாது. லஞ்ச, ஊழல் இல்லாத அரசு என்பது தமிழகத்தின் தேவையாக இருக்கிறது. இதை மனதில் வைத்து வாக்களிப்பது அவசியம். மேலும், இந்திய ராணுவம் பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்த்து எல்லையில் சண்டையிட்டு வெற்றி பெற்றதற்கு மோடி அரசின் திறமையான நிர்வாகமே காரணம் என கூறினார்.
கள்ள நோட்டு மற்றும் கறுப்பு பணத்துக்கு எதிரான பிரதமரின் நடவடிக்கையை அனைத்துத் தரப்பு மக்களும் வரவேற்றுள்ளனர். இவ்விரு நடவடிக்கைகளையும் சரியே என நினைத்தால் இடைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications