தமிழக அரசியல் பின்னணியில் பாஜக.. ராகுல்காந்தியை சந்தித்த பிறகு குஷ்பு குற்றச்சாட்டு
டெல்லி: தமிழக அரசியலின் பின்னணியில் பாஜக உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளர் குஷ்பு தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு இன்று டெல்லியில் அக்கட்சி தேசிய துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். இதன்பிறகு, குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது:

சில விஷயங்களை ராகுல் காந்தியிடம் பகிர்ந்துகொள்ள வேண்டியிருந்தது என்பதால்தான், அவரை சந்தித்து பேசினேன். டெல்லியில் விவசாயிகளை சந்திக்கலாம் என்று திட்டமிட்டிருந்தேன். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்பை தொடர்ந்து விவசாயிகள் ஊருக்கு சென்றுவிட்டனர். விவசாயிகளை அவர்களை முதல்வர் 40 நாட்களுக்கு பிறகுதான் சந்தித்து இருக்கிறார்.
விவசாயிகளுக்காக தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதன் மூலம் விவசாயிகளுக்கு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அதிமுகவின் இரு அணிகளும் இணையும் முயற்சிக்கு இரட்டை இலை சின்னம்தான் காரணம். அவர்கள் தனித்தனியாக தேர்தலில் நின்றால் யாருக்கும் ஓட்டு கிடைக்காது. இப்போது 3வதாக டி.டி.வி.தினகரனும் வந்து சேர்ந்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெறும் ஒவ்வொரு விஷயத்தின் பின்னணியிலும் பாஜக இருக்கிறது. தமிழக அரசியலில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணி சேர்ந்தால் ஆச்சரியப்பட வேண்டியது இல்லை. என்ன செய்தாலும், தமிழகத்தில் பாஜக நுழைய முடியாது. அவர்களின் கனவு பலிக்காது. இவ்வாறு கூறினார்.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி!












Click it and Unblock the Notifications