காமன்வெல்த் விவகாரத்தில் அரசியல் செய்கிறது பாஜக- திருமா புகார்
சென்னை: காமன்வெல்த் மாநாட்டு விவகாரத்தில் அரசியல் செய்கிறது பாஜக என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே, இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் கலந்து கொண்டு திருமாவளவன் பேசுகையில்,
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ள கூடாது. இந்தியா சார்பில் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்க கூடாது என்று மத்திய அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.
இந்த பிரச்சனையில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஒருமித்த கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். மத்திய அமைச்சர்கள் ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன் ஆகியோர் தமிழக மக்களின் உணர்வுகளை மத்திய அரசுக்கு எடுத்து கூறி தங்கள் ஆதரவை தெரிவித்து உள்ளனர்.
மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், பிரதமர் நல்ல முடிவு எடுப்பார் என்று கூறி உள்ளார். தமிழக கங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனும் தனது உணர்வை வெளிப்படுத்தி உள்ளார்.
இந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் ராஜபக்சே செய்த இனப்படுகொலைக்கு ஆதரவு தெரிவித்தது ஆகி விடும். சர்வதேச மன்றத்தில் அங்கீகாரம் கிடைத்து விடும். தமிழக காங்கிரசில் ஏற்பட்டு உள்ள மாற்றத்தால் இந்த மாநாட்டில் பிரதமர் நிச்சயமாக கலந்து கொள்ள மாட்டார் என நான் நம்புகிறேன்.
இந்த பிரச்சினையில் பாரதீய ஜனதா கட்சி அரசியல் நடத்துகிறது. காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி கொடுக்கிறது.
ஆட்சியில் இருந்த போது பாரதீய ஜனதா ஈழத்தமிழர்களுக்காக எதையும் செய்யவில்லை. இந்த மாநாட்டிலும் இந்தியா கலந்து கொள்ளவில்லை என்றால் இருநாடுகளுக்கிடையே உறவில் எந்த பாதிப்பும் ஏற்படாது.
மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டுதான் ஈழத் தமிழர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று இல்லை. இதில் பங்கேற்காமலேயே நன்மை செய்யலாம்.
இசைப்பிரியா உயிரோடு பிடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு உள்ளார். இதற்கான ஆதார வீடியோ பதிவு உள்ளது. மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமை ஆணைய கூட்டத்தில் இசைப்பிரியா கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரத்தை வெளியிடுவதன் மூலம் ராஜபக்சேவுக்கு மேலும் நெருக்கடி ஏற்படும் என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications