சென்னை மாநகராட்சியைக் கண்டித்து நாளை பாஜக முற்றுகைப் போராட்டம்... தமிழிசை அறிவிப்பு
சென்னை: சென்னையில் டெங்கு காய்ச்சல் பரவிவருவதை தடுக்கத் தவறிய மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து நாளை பாஜக சார்பில் ரிப்பன் கட்டிடத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
தமிழகத்தில் பருவமழை தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் சென்னை மக்கள் பரிதவித்துக் கொண்டுள்ளனர். சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. சென்னையில் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல நோய்கள் பரவிவருகின்றன. இதனைத் தடுக்கத் தவறிய மாநகராட்சி நிர்வாகம் செயலிழந்துவிட்டது. டெங்கு நோய் பற்றிய தரவுகள் அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.எனவே, இதுபற்றி மாநகராட்சி வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

சென்னையில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கத் தவறிய மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து நாளை ( நவம்பர் 4) காலை 11 மணிக்கு ரிப்பன் கட்டிடம் முன்பு பா.ஜ.க. சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.
இதே கருத்தை வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் நேற்று போராட்டம் நடத்தியிருக்கிறார். மேலும் பாடகர் கோவனை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இவர்கள் கட்சியை சேர்ந்த தலைவரை யாராவது கேவலமாக சித்தரித்து பாடியிருந்தால் இப்படித்தான் விடுதலை செய்யும்படி கூறுவாரா?
தமிழகத்தில் திமுக, அதிமுக.,வுக்கு மாற்று பா.ஜ.க. மட்டும் தான். தேர்தலுக்கான கூட்டணியாக மாறியிருக்கும் மக்கள் நல கூட்டியக்கத்தால் தமிழகத்தின் தலை எழுத்தை மாற்றி விட முடியாது. முதலில் இந்த கூட்டணி தேர்தல் வரை தொடருமா? என்பதே சந்தேகம் தான்.
பா.ஜ.க.வை எங்கள் கூட்டணியில் சேர்க்க மாட்டோம் என்று வைகோ கூறியிருக்கிறார். நாங்களே அவர்களை விரும்பவில்லை. பிரதமர் நரேந்திரமோடியின் நல்ல திட்டங்கள் தமிழகத்தை வந்தடைய தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற வேண்டும்.
தமிழகத்தில் ‘நமக்கு நாமே' என்ற பெயரில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வரும் பயணத்தை மக்கள் நம்ப தயாராக இல்லை என்று அவர் கூறினார்.
முன்னதாக, விழுப்புரம் மாவட்டம் மைலம் தொகுதியை சேர்ந்த பா.ம.க. முன்னாள் மாவட்ட துணை செயலாளர் மூர்த்தி, தனது ஆதரவாளர்களுடன் பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்











Click it and Unblock the Notifications