ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே.நகரில் களமிறங்கும் பாஜகவின் எம்.என். ராஜா
சென்னை: சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் 26 பேர் கொண்ட 3ம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிடப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து எம்.என்.ராஜாவும், கொளத்தூரில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கே.டி.ராகவனும் களமிறங்குகின்றனர்.
தமிழக சட்டசபை தேர்தலில் ஐ.ஜே.கே உள்ளிட்ட சில சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிட உள்ளது.

மே 16ம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 3 தினங்களே உள்ளன. பாஜக வேட்பாளர்கள் பட்டியல் பல கட்டங்களாக வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் 25ம் தேதி 54 பேர் கொண்ட முதல் பட்டியலை பாஜக வெளியிட்டது.
கடந்த 10ம் தேதி 30 பேர் கொண்ட 2வது பட்டியலை வெளியிட்டது. கடந்த 15ம் தேதி 57 பேர் கொண்ட 3வது பட்டியலை பாஜக வெளியிட்டது. இந்த நிலையில் இன்று 26 பேர் கொண்ட 4வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
26பேர் கொண்ட அந்த பட்டியல் விவரம் வருமாறு,
1. பொன்னேரி - கணேசன்
2. மாதவரம் - ஜானகி ராமன்
3. திருவொற்றியூர் - சிவகுமார்
4. ஆர்.கே.நகர் - ராஜா போட்டி
5. கொளத்தூர் - கே.டி.ராகவன்
6. செய்யூர் - சம்பத் ராஜ்
7. ராணிப்பேட்டை - நாகராஜ்
8. ஊத்தங்கரை - எஸ்.கே.பாண்டு
9. ஆரணி - கோபி
10. திண்டிவனம் - பூவழகி
11. விக்கிரவாண்டி - ஆதவன்
12. பரமத்திவேலூர் - ராஜ்குமார்
13. குமாரபாளையம் - ஈஸ்வரன்
14. கோபி - கணபதி
15. குன்னூர் - குமாரன்
16. அவினாசி - பெருமாள்
17. வால்பாறை - முருகேசன்
18. பழனி - கனகராஜ்
19. குளித்தலை - சதக்கத்துல்லா
20. சிதம்பரம் - மணிமாறன்
21. சீர்காழி - இளவழகன்
22. திருமயம் - வடமலை
23. திருப்பத்தூர் - கோவிந்தராஜன்
24. உசிலம்பட்டி - சமக்கிளி
25. ஆண்டிபட்டி - சக்கரவர்த்தி
26. ஆலங்குளம் - அன்புராஜ்
பாரதிய ஜனதா கட்சி இதுவரை 167 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. பாரதிய ஜனதா கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி 45 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை சமீபத்தில் ஐ.ஜே.கே அறிவித்தது. பாஜக கூட்டணியில் உள்ள தேவநாதன் கட்சிக்கு 24, கொங்கு ஜன நாயக கட்சிக்கு 4 என 73 தொகுதிளை ஒதுக்கியது பாஜக இந்த நிலையில் 167 தொகுதிகளில் பாஜக போட்டியிடும் என வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications