பாஜக முதல் பட்டியல்: 6 வேட்பாளர்கள் அறிவிப்பு!
சென்னை: பாஜக சார்பில் போட்டியிடும் 8 பேரில் 6 பேரின் பெயர்களை பாஜக அறிவித்துள்ளது.
பாஜக தனது 6வது வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் முதல் பட்டியலை வெளியிட்டுள்ளது.
எதிர்பார்த்தது போல மாநிலத் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரியில் போட்டியிடுகிறார்.

தென் சென்னையில் இல.கணேசன்
தேசிய செயற்குழு உறுப்பினரும், முன்னாள் மாநிலத் தலைவருமான இல.கணேசன் தென் சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார்.

நீலகிரியில் எஸ். குருமூர்த்தி
நீலகிரி தனித் தொகுதியில் எஸ்.குருமூர்த்தி போட்டியிடுகிறார். இத்தொகுதியில் திமுக சார்பில் ஏ.ராசா நிறுத்தப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.

கோவையில் சி.பி.ஆர்
எதிர்பார்த்தது போலவே முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சிவகங்கையில் ப.சி..மகனுடன் மோதும் எச்.ராஜா
சிவகங்கை தொகுதியில் எச்.ராஜா வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். இவர் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்ததை எதிர்த்துப் போரிடப் போகிறார்.

ராமநாதபுரத்தில் குப்புராமு
ராமநாதபுரத்தில் குப்புராமு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் யார் என்றே தெரியவில்லை.

இன்னும் 2 தொகுதிகளுக்கு பாக்கி
இன்னும் வேலூர் மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட வேண்டும்.

வானதி - தமிழிசை
கோவையில் வானதி சீனிவாசன் போட்டியட முயன்று வருவதாக முன்னதாக தகவல்கள் கூறின. ஆனால் அவர் வேலூரில் நிறுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதேபோல தமிழிசை செளந்தரராஜன் தஞ்சையில் நிறுத்தப்படக் கூடுமோ என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications