அதிமுக மீது பாஜகவின் அடுத்தடுத்த ஆவேச அட்டாக்... காரணம் இதுதாங்க...
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் களம் பரபரப்பாகிக் கொண்டிருக்கிறது... திமுக மீது மட்டுமே விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் அதிமுக, தமிழக அரசு மீதும் பாரதிய ஜனதா கட்சி நாள்தோறும் குற்றச்சாட்டுகளை அக்னி ஏவுகணைகளாக வீசி வருகிறது... இதற்கு அதிமுகவும் பதிலடி தருகிறது. இப்படி திடீரென அதிமுக- பாஜக மோதல் விஸ்வரூபமெடுக்க கூட்டணி விவகாரமும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
சட்டசபை தேர்லில் அதிமுக- பாஜக கூட்டணி அமைய வாய்ப்பிருப்பதாக முதலில் தகவல்கள் வெளியாகி இருந்தன. அதிமுக கூட்டணியில் பெரிய கட்சிகள் எதுவும் சேராத நிலையிலும் இந்த யூகம் தொடரவே செய்தது.
தமிழகத்தில் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக மத்திய அமைச்சர் ஜவடேகர் முதல் முறையாக வந்தபோதே ஜெயலலிதாவையும் சந்திக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை ஜவடேகர் சந்தித்து பேசினார். இதனால் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்கப் போவதில்லை என்பது தெரியவந்தது.

தனித்துவிடப்பட்ட பாஜக
இருப்பினும் தமிழக பாஜக தலைவர்கள் அவ்வப்போது அதிமுகவுடன் கூட்டணி அமையக் கூடும் என்ற சிக்னலை வெளிப்படுத்தும் கருத்துகளையே கூறிவந்தனர். இந்நிலையில் அதிமுக தம்முடைய கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தி மும்முரமாகிவிட்டது. தேமுதிகவும் மக்கள் நலக் கூட்டணியுடன் கைகோர்த்துவிட்டது. பாமகவோ பாஜகவுடன் கூட்டணி சேரப் போவதில்லை என கைவிரித்தது.
இதனால் தனித்துவிடப்பட்டது பாரதிய ஜனதா கட்சி. தமிழகத்தில் ஏற்கனவே 5வது அல்லது 6-வது இடத்துக்குத்தான் போட்டி என்கிற நிலையில் பாஜக உள்ளது. இந்த இடத்தையாவது தக்க வைக்க அமைதியாக இருந்து கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது; ஏற்கனவே திமுக மீது மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் கடுமையாக விமர்சனங்களை வைக்க அதுவே ஊடகங்களில் பிரதான விவாதமாக நடத்தப்படுகிறது. இதுபோல் ஊடக கவனத்தை ஈர்க்கவும் தமது கட்சியின் இருப்பை வெளிப்படுத்தவும் பாஜக எடுத்திருக்கும் அஸ்திரம்தான் கடுமையான அதிமுக எதிர்ப்பு நிலை.

பொம்மலாட்ட கார்ட்டூன்
முதலில் பாஜக தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் "சின்னக்கா இயக்கத்தில் பெரியக்கா நடிப்பில் தேர்தல் நாடகம்..இனிதே ஆரம்பம்" என ஒரு பொம்மலாட்ட கார்ட்டூனைப் போட்டது... ஊடகங்கள், சமூகவலைதளங்களில் அந்த கார்ட்டூன் பரபரப்பை ஏற்படுத்தியது.

பியூஷ் கோயல் பாய்ச்சல்
இதன் பின்னர் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கவே முடியவில்லை என குண்டு வீசினார். இது பற்றி எரியத் தொடங்கியது. இதற்கு தற்போது அதிமுகவும் பதிலடி கொடுத்து வருகிறது. தமிழகம் வரும் மத்திய அமைச்சர்களும் ஆமாம் ஆமாம்..பியூஷ் கோயல் சொல்வது உண்மை என பேசிவருகிறார்.

அதிமுக பதிலடி
இந்நிலையில்தான் அதிமுக கூட்டணியில் சேர்க்காமல் போனதால் ஏற்பட்ட வயிற்றெரிச்சலிலும் விரக்தியிலுமே பாஜக இப்படி எங்கள் மீது அவதூறுகளைப் பரப்புவதாக அதிமுகவின் பேச்சாளர் சி.ஆர்.சரஸ்வதி ஒரே போடாகப் போட்டுவிட்டார்.
அதாவது அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருந்தால் தமிழகத்தில் வலுவாகக் காலூன்றி இருக்கலாம்; ஆனால் அதிமுக உதாசீனப்படுத்திவிட்டதே; இதனால் தற்போது தனித்து போட்டியிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோமே என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் அதிமுக அரசு மீதான பாஜகவின் பாய்ச்சல் என்கிறார் சரஸ்வதி.

இப்படி செய்யலாமே
மத்தியில் ஆட்சியில் இருக்கும் மோடி அரசு ஏகப்பட்ட நலத் திட்டங்களை செயல்படுத்தி வருவதாகக் கூறும் பாஜக அதை மட்டுமே நம்பி, தனித்து போட்டியிட்டு உண்மையான பலத்தை காட்டலாமே.. மோடி அரசு மீது தமிழக மக்கள் எவ்வளவு மதிப்பு வைத்துள்ளார்கள் என்பதைக் காட்ட இதுவே சரியான தருணம் பாஜக... ரெடி, ஸ்டார்ட்!
-
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications