பா.ஜ.க- த.மா.கா இடையே கூட்டணி பேச்சு நடைபெறுகிறது... தமிழிசை சவுந்தரராஜன்
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக, மக்கள் நலக் கூட்டணி, தேமுதிக என அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியது தமிழ் மாநில காங்கிரஸ். ஆனால் திமுக கூட்டணியில் தமாகாவை சேர்க்க காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இதனால் அதிமுகவுடன் தீவிர பேச்சுவார்த்தையை தமாகா நடத்தியது. தமாகாவுக்கு அதிமுகவும் 15 தொகுதிகளை ஒதுக்க முன்வந்தது. ஆனால் தமாகா இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என நிபந்தனை விதித்தது அதிமுக. இதனை தமாகா ஏற்க மறுத்துவிட்டது.

இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 2-ம் கட்ட தலைவர்களுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். பாஜக கூட்டணியில் இணைவது குறித்து தமாகாவில் ஒருமித்த கருத்து ஏற்படுமா எனத் தெரியவில்லை.
அப்படி தமாகாவில் ஒருமித்த கருத்து ஏற்பட்டால் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை நடத்துவோம். ஊழலை ஒழிக்க விரும்பும் தமாகா, பாஜக கூட்டணியில்தான் இணைய வேண்டும் என்றார்.
கூட்டணி குறித்து தெளிவான முடிவு எடுக்க முடியாமல் திணறும் வாசனுக்கு எதிராக தமாகாவில் போர்க்கொடி தூக்க தலைவர்கள் தயாராகிவிட்டனர். இந்த நிலையில் பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமாகா நிச்சயம் உடையும் என்றே தெரிகிறது.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்











Click it and Unblock the Notifications