தலைவரை அவதூறாகப் பேசினால் தப்பு!.. ஆனால் தலைவரே நடு ரோட்டில் நின்று அசிங்கமாக பேசலாமா?
Recommended Video

சென்னை: ஒரு அரசியல் கட்சித் தலைவரை பொது இடத்தில் அவதூறாக பேசியது தப்பு என்றால் ஒரு தலைவரே நடு ரோட்டில் நின்று கொண்டு அசிங்க அசிங்கமாக பேசுவது மட்டும் சரியா என்பதை பாஜக தலைவர்கள் விளக்க வேண்டும்.
தற்போதுள்ள அரசியல் கட்சி தலைவர்கள் முதல் தனிநபர் வரை தான் செய்தால் சரி. இதே அடுத்தவர் செய்தால் தவறு என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். இது அரசியல் கட்சிகளுக்கு தேவையானதும் கூட. இன்று ஆளும் கட்சி செய்தால் அது தவறு, இதையே நாளை ஆளும் கட்சியாக வரும் எதிர்க்கட்சி செய்தால் சரி என்ற மனப்பான்மை மேலோங்கி காணப்படுகிறது.
இதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன. சமீபத்தில் சென்னை- தூத்துக்குடி விமானத்தில் ஆராய்ச்சி மாணவி ஒருவர் பயணம் செய்தார். அதே விமானத்தில் பாஜக மூத்த தலைவர் ஒருவரும் பயணம் செய்தார்.

போலீஸில் புகார்
அப்போது அந்த மாணவி, அந்த தலைவரை நோக்கி பாசிச பாஜக ஒழிக என கோஷமிட்டுள்ளார். ஓரிரு முறை இவ்வாறு நடக்கவே அந்த தலைவருக்கு கடும் கோபம் ஏற்பட்டு கொந்தளித்து விட்டார். மேலும் அந்த மாணவியின் பின்புலத்தில் தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் ஏதோ சமூகவிரோதி போல் அவர் நடந்து கொண்டதாகவும் கூறி போலீஸில் புகாரையும் கொடுத்தார்.

வீராவசனம்
மேலும் அவர் கைதானது குறித்து அந்த தலைவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது நீங்கள் ஒழிக என உங்கள் காதுப்பட யாராவது கூறினால் நீங்கள் சும்மா இருப்பீர்களா என வினவினார். அதோடு பொது இடத்தில் ஒரு கட்சியின் தலைவரை பார்த்து இப்படி பேசுவது தவறு என்றும் வசனம் பேசினார்.

மசூதி வழியே
ஆக பொது இடத்தில் ஒரு கட்சியை விமர்சித்ததை அந்த தலைவரால் பொறுத்து கொள்ள முடியவில்லை. ஆனால் இங்கு இன்னொரு தலைவரான எச் ராஜா, போலீஸ் மற்றும் நீதிமன்றத்தை வாய்க்கு வந்தபடி பேசிவிட்டார். புதுக்கோட்டை அருகே திருமயத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மசூதி வழியே நடத்தக் கூடாது என போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
வீடியோ
இதற்கு போலீஸாருக்கு வெட்கம் இல்லையா. லஞ்சம் பெறுபவர்கள்தானே நீங்கள். நானும் லஞ்சம் தரேன். ஹைகோர்ட்டாவது ------------- (கெட்ட வார்த்தை) பேசினார். அதுவும் நட்ட நடு ரோட்டில் அவர் பேசிய பேச்சுகள் வீடியோவாகவே எடுக்கப்பட்டன.

நாராசம்
இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எனினும் ராஜா சம்பந்தப்பட்ட கட்சியின் மாநில தலைவர் இன்னும் மௌனம் சாதித்து வருகிறார். அவர் பார்வையில் ஒரு அரசியல் தலைவரை பொது இடத்தில் அவதூறாக பேசுவது தவறு என்றால் ஒரு கட்சியின் தலைவரே நடு ரோட்டில் நாராசமாக பேசுவது மட்டும் சரியா? உங்களுக்கு வந்தால் ரத்தம் , மத்தவங்களுக்கு வந்தால் அது தக்காளி சட்னியா?












Click it and Unblock the Notifications