'அம்மா'வுக்கு வாழ்த்து சொன்ன ரஜினி: அதிர்ச்சியில் பாஜக
சென்னை: சிறையில் இருந்து வீடு திரும்பிய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை போயஸ் கார்டனுக்கு வரவேற்று ரஜினிகாந்த் கடிதம் எழுதியது பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 22 நாட்கள் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடந்த சனிக்கிழமை ஜாமீனில் வெளியே வந்தார். அவரை வரவேற்க பெங்களூரில் ஏராளமான அதிமுகவினர் குவிந்தனர்.
சென்னை வந்த அவருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயலலிதாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்.

மகிழ்ச்சி
மதிப்பிற்குரிய ஜெயலலிதாஜி, உங்களை மீண்டும் போயஸ் கார்டனில் பார்ப்பதில் மகிழ்ச்சி என்று ரஜினி தனது கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

அதிமுக
ஜெயலலிதா மீது கட்சியினர் தவிர பிரபலங்களும் அன்பு வைத்துள்ளதுனர் என்று ரஜினியின் கடிதத்தை பார்த்த அதிமுகவினர் தெரிவித்துள்ளனர்.

பாஜக
ரஜினியை எப்படியாவது தங்கள் கட்சியில் சேர்க்க அதீத முயற்சி செய்து வரும் பாஜகவுக்கு இந்த கடிதம் அதிர்ச்சி அளித்துள்ளது.

சூசகம்
அரசியலுக்கு வர மாட்டேன் என்பதையே ரஜினி இந்த கடிதம் மூலம் சூசகமாக தெரிவித்துள்ளார் என பாஜக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சந்தேகமே
ரஜினியை பாஜகவுக்கு வருமாறு நாங்கள் அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவர் எங்களின் அழைப்பை ஏற்பது சந்தேகம் தான். தமிழகத்தில் எங்கள் கட்சியின் நிலைமையை மேம்படுத்த இனியும் நாங்கள் ரஜினியை நம்ப முடியாது என்பதையே இந்த கடிதம் தெரிவித்துள்ளது என தமிழக பாஜக தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications