'எனக்கு இதை தவிர வேறுவழியில்லை'.. நண்பர்களிடம் மன்னிப்பு கேட்ட அண்ணாமலை.. பரபரப்பு விளக்கம்
சென்னை: எனது நண்பர்களின் விவரங்களும் பொதுவெளியில் வெளியானதால், அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதித்துள்ளது. இதற்கு பின்னால் உள்ள நியாயமான காரணங்களை விளக்கி என் நண்பர்களிடம் மன்னிப்பும் கோரியிருக்கிறேன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமையான நேற்று திமுகவின் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, திமுகவினர் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, திமுக எம்.பி கனிமொழி கருணாநிதி, கலாநிதி மாறன், டி ஆர்.பாலு, அமைச்சர் துரைமுருகன், வடசென்னை எம்.பி கலாநிதி வீராசாமி, அமைச்சர் பொன்முடி, அமைச்சர் அன்பில் மகேஷ், முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன் மற்றும் திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோரின் சொத்து பட்டியல் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் சொத்து பட்டியல் தொடர்பான விவரங்கள் அடங்கிய வீடியோவை அண்ணாமலை நேற்று வெளியிட்டார். இதன்படி திமுகவின் சொத்து மதிப்பு ரூ.1.31 லட்சம் கோடி என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
இதற்கு திமுக கடுமையான பதிலடி கொடுத்தது. நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் அறிவித்தது. இதனிடையே வாட்ச் பில் போலி என்றும், வாட்ச் சீரியல் நம்பர் செட் ஆகவில்லை என்றும் பல்வேறு பதிவுகளை திமுகவினர் வெளியிட்டனர். மேலும் அண்ணாமலை குடியிருக்கும் வீட்டின் வாடகை உள்பட அவரை பற்றி பல விவரங்கள் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பினார். திமுகவினர் நேற்று முழுவதுமே அண்ணாமலையின் வாட்ச் பில் குறித்து அவர் எழுப்பிய ஊழல் குற்றச்சாட்டுக்கும் பதிலடி கொடுத்தனர். வாட்ச் பில் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் என பல விஷயங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.
இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: ஏப்ரல் 14ஆம் தினமான நேற்று, நான் அணிந்திருக்கும் கைக்கடிகாரத்தின் ரசீது, எனது வங்கிக் கணக்கு, கிரெடிட் கார்டு மற்றும் கல்விக் கடன் விவரங்களுடன் திமுகவினரால் குவிக்கப்பட்டுள்ள சொத்துக்களின் விவரங்களையும் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிட்டிருந்தேன்..
அவற்றின் விவரங்கள் https://enmannenmakkal.com என்கிற இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன. வங்கி பரிவர்த்தனைகளின் மூலமாக எனது நண்பர்களின் விவரங்களும் பொதுவெளியில் வெளியானதால், அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதித்துள்ளது என்பதையும் நான் புரிந்து கொள்கிறேன்.
எனது செயல்களுக்குப் பின்னால் உள்ள நியாயமான காரணங்களை விளக்கி, என் நண்பர்களிடம் மன்னிப்பும் கோரியிருக்கிறேன். திசை மாறிச் சென்றுள்ள தமிழக அரசியலில், இதைத் தவிர, வேறு சரியான வழி எனக்குத் தெரியவில்லை.

தமிழகத்தில் நாம் எதிர்பார்க்கும் மாற்றமும், அரசியல்வாதிகளிடமிருந்து மக்கள் எதிர்பார்க்கும் வெளிப்படைத்தன்மையும், திமுக போன்ற ஊழல் கட்சிகள் அதிகாரத்தில் இருக்கும் வரை சாத்தியமில்லை.
திமுகவின் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர்கள் மக்களால், மக்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என்ற பொறுப்பை இனியாவது உணர வேண்டும்.
எனவே, இன்று முதல், திமுகவிடம் தொடர்ந்து கேள்விகள் எழுப்புவோம். மக்களுக்கான எங்கள் கேள்விகளுக்கு உரிய பதில்களையும் திமுகவிடமிருந்து எதிர்பார்க்கிறோம்! என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications