கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்காவின் இந்திய கிளையை முடக்கிய பாஜக.. தகவல்களை மறைக்க திட்டம்!
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்தின் இந்திய கிளை அமைப்பின் இணைய பக்கத்தை மத்திய பாஜக அரசு முடக்கி இருக்கிறது.
Recommended Video

சென்னை: கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்தின் இந்திய கிளை அமைப்பின் இணைய பக்கத்தை மத்திய பாஜக அரசு முடக்கி இருக்கிறது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்காவிற்கும் பாஜகவிற்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் நேற்றுதான் குற்றச்சாட்டு வைத்து இருந்தது.
இந்த முறைகேட்டை பிரபல சேனல் 4 தொலைக்காட்சிதான் கண்டுபிடித்தது. அவர்கள் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பேஸ்புக்கில் மக்களின் தகவல்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடி இருக்கிறது. பேஸ்புக் நிறுவனம் அதன் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே இந்த சோதனைக்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வேறு பெயர்
உலகம் முழுக்க இந்த முறைகேட்டில் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் நேரடியாக ஈடுபட்டு இருந்தாலும், இந்தியாவில் மறைமுகமான வேலைகளையே செய்து இருக்கிறது. இந்தியாவில் இந்த நிறுவனம் 'ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்' என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலமாக அரசியல் சார்ந்த நிறைய பணிகள் செய்யப்பட்டு இருக்கிறது.

பாஜக
இந்த 'ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்' நிறுவனம் பாஜகவிற்கு எல்லா மாநில தேர்தல்களிலும் உதவி உள்ளது. சென்ற நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவிற்கு இந்த நிறுவனம்தான் உதவியுள்ளது. மோடி குறித்த 'அலையை' உருவாக்கியது இவர்கள்தான் என்று புகார் வைக்கப்பட்டு இருக்கிறது.
|
அவர்களே
இதுகுறித்து அந்த 'ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்' நிறுவனமே ஒப்புக்கொண்டது உள்ளது தான் இங்கே பெரிய விஷயம். அவர்கள் தங்கள் பக்கத்தில் ''நாங்கள் பாஜக கட்சிக்கு தேர்தலில் உதவி இருக்கிறோம். எங்களால் அவர்கள் நான்கு முறை வெவ்வேறு தேர்தல்களில் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.'' என்றுள்ளனர். இதைப்பற்றி காங்கிரஸ் உறுப்பினர்கள் டிவிட் செய்துள்ளார்கள்.

முடக்கம்
ஆனால் தற்போது பாஜக அரசு இதில் வேறு மாதிரியான நடவடிக்கை எடுத்துள்ளது. 'ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்' நிறுவனத்தின் இணையதள பக்கம் முடக்கப்பட்டு இருக்கிறது. அதில்தான் பாஜக கட்சிக்கும் 'ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்' நிறுவனத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பு குறித்து எழுதப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications