உஸ்ஸ்ஸ் அப்பப்பா…. பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு: கும்மியடிக்கும் குழப்பம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 40 லோக்சபா தொகுதிகளையும் பங்கு வைத்து பிரித்து பிரச்சாரத்திற்கு கிளம்புவதற்குள் பாஜக கூட்டணிக்கு நாக்கு தள்ளிவிடும் போலிருக்கிறது.

மூன்று மாதங்களுக்கு முன்பே முதன்முதலில் கூட்டணிப் பேச்சுவார்த்தையைத் தொடங்கிய பாஜக இன்னும் அதனை முடிக்க முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறது.

'ஏன் போட்டு இழுக்கிறீர்கள்? இருக்கிற கட்சியோடு பேசி முடியுங்கள். தமிழ்நாட்டில் இருந்து மூன்று எம்.பி-க்கள் ஜெயித்து வந்தால் கூட போதும் என்றுதான் நினைக்கிறோம் என்று ராஜ்நாத் சிங் சொல்லிவிட்டார். ஆனாலும், முடிக்கப்படாமலும் முறிந்துவிடாமலும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்துகொண்டே இருக்கிறது

தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. ஆகிய மூன்று கட்சிகளையும் சேர்த்து பாஜக உடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தைகள் தொடங்கியபோது... தே.மு.தி.க-வுக்கு 11, பாஜக., ம.தி.மு.க, பா.ம.க. ஆகிய மூன்று கட்சிகளுக்கும் தலா 9 என்று பேசப்பட்டது.

ஆனால், தே.மு.தி.க-வுக்கும் தங்களுக்கும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்று பாஜக தலைவர்கள் சிலர் சொன்னார்கள். தே.மு.தி.க-வுக்கு இணையாக பாஜகவும் 11 இடங்களில் போட்டியிடும் என்று அதற்கு சமாதானம் சொல்லப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில், 19 தொகுதிகள் வேண்டும் என்று விஜயகாந்த் பிடிவாதமாக நின்றார்

முதலில் 'பா.ம.க. எதற்கு?' என்று கேட்டுவந்த விஜயகாந்த், 'பா.ம.க. இருந்தால்தான் வட தமிழ்நாட்டில் நாமும் இரண்டு மூன்று தொகுதிகளில் ஜெயிக்கலாம்' என்று சொல்ல ஆரம்பித்தார். அதனால், மூன்று தொகுதிகளைக் குறைத்து 16 தாருங்கள் என்று கேட்டார். 'பா.ம.க. வந்தால் 12. வராவிட்டால் 14 தருகிறோம்' என்றது பாஜக.

பாஜகவின் புது கணக்கு

பாஜகவின் புது கணக்கு

தே.மு.தி.க-வுக்கு 14. பாஜக, ம.தி.மு.க., பா.ம.க-வுக்கு தலா எட்டு என்று புதுக்கணக்கு போட்டது பாஜக . இதை ராமதாஸ் ஏற்கவில்லை. '10 தொகுதிக்கு நாங்கள் வேட்பாளர் பட்டியல் அறிவித்துவிட்டோம். அந்தப் 10 தொகுதிகளை அப்படியே தந்துவிட வேண்டும் என்று முரண்டு பிடிக்கவே சிக்கல் நீடித்தது.

ரங்கசாமியும் முரண்டு

ரங்கசாமியும் முரண்டு

அறிவிக்கப்பட்ட 10 தொகுதிகளைத் தர இயலாது. எட்டுதான் என்று பாஜக ஒரேடியாக நின்றது. 'தமிழகத்தில் ஒன்பது, புதுவையோடு சேர்த்து 10' என்றது பா.ம.க. 'புதுவை மாநிலத்தை நாம் பேச முடியாது. அங்கு மாநிலத் தலைவர் வேறு' என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறவே, ''புதுவையை ரங்கசாமியிடம் கேட்டு நாங்கள் வாங்கிக்கொள்கிறோம் என்று பா.ம.க. போனது. ஆனால், அதனை ரங்கசாமி ஏற்கவில்லை. இதற்கிடையே ஒவ்வொரு கட்சியும் விருப்பத் தொகுதிகளை கொடுக்கவே பாஜகவிற்கு பேசி முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

பாஜக தொகுதிகள்

பாஜக தொகுதிகள்

தென்சென்னை, கோவை, கன்னியாகுமரி, சிவகங்கை, மதுரை, ஸ்ரீபெரும்புதூர், கிருஷ்ணகிரி, திருச்சி, சேலம், வேலூர்

தேமுதிக

தேமுதிக

திருவள்ளூர், மத்திய சென்னை, ஸ்ரீ பெரும்புதூர், அரக்கோணம், காஞ்சிபுரம், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, மதுரை, கோவை, நெல்லை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ஈரோடு, திண்டுக்கல்

பாமக

பாமக

ஸ்ரீ பெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, அரக்கோணம், அரணி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர், மயிலாடுதுறை, புதுச்சேரி

மதிமுக

மதிமுக

விருதுநகர், காஞ்சிபுரம், ஈரோடு, தூத்துக்குடி, பொள்ளாச்சி, தேனி, மத்திய சென்னை, கடலூர்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

ஈரோடு, திருப்பூர், நாமக்கல்

புதிய நீதிக்கட்சி

புதிய நீதிக்கட்சி

ஆரணி, வேலூர்

என்.ஆர். காங்கிரஸ்

என்.ஆர். காங்கிரஸ்

புதுச்சேரி

விஜயகாந்த் பிரச்சாரம்

விஜயகாந்த் பிரச்சாரம்

இப்படி ஒரு சில குறிப்பிட்ட தொகுதிகளை கூட்டணிக்கட்சியினர் வேண்டும் என்று கேட்பதால்தான் பாஜக கூட்டணியில் குழப்பம் நீடித்து வருகிறது. இதில் கூட்டணியில் இருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்பிவிட்டார்.

பாமக அறிவிப்பு

பாமக அறிவிப்பு

பாட்டாளி மக்கள் கட்சியும் தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்திற்கு கிளம்ப தயாராகிவிட்டது. அதனால் பாஜக கூட்டணி அமைத்துள்ள தேரினை கூட்டணிக்கட்சியினர் லோக்சபா தேர்தல் வரை இழுத்து நிலை சேர்ப்பார்களா? அல்லது தனித்தனியாக பிரிந்து போட்டியிடுவார்களா? என்பது ராஜ்நாத்சிங் வந்த பின்னரே தெரியவரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+