விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக பாஜக தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள்! - தமிழிசை
சென்னை: விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக பாஜக ஏற்றாலும், எங்கள் தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள். எனவே வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனித்தே 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக மீண்டும் அறிவித்துள்ளார் தமிழிசை சௌந்தர்ராஜன்.
பாஜகவின் மாநிலத் தலைவர் தமிழிசை நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "பாஜக தலைவர் அமித்ஷா புதன்கிழமை தமிழகம் வருகிறார். ஆனால் கூட்டணி குறித்து யாரையும் அவர் சந்திக்கும் திட்டமில்லை.

அ.தி.மு.க.-தி.மு.க.விற்கு மாற்றாக தமிழகத்தில் மாற்று அணி உருவாக வேண்டும் என்பதற்காக தான் கடந்த 2014-ம் பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. உள்பட பல்வேறு கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலை சந்தித்தோம். அதே நிலையில், வரும் சட்டசபை தேர்தலை சந்திக்க விரும்பினோம்.
ஆனால் கூட்டணி ஏற்படுவதற்காக அவர்களிடம் (விஜயகாந்த்) இருந்து சில நிபந்தனைகள், எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால் எங்களைப் பொறுத்தவரை கூட்டணிக்காக, மக்கள் நலனில் சமரசம் செய்துகொள்ளமாட்டோம். எனவே தான் நிபந்தனைகளுக்கு கட்டுப்படாமல், துணிச்சலோடு, சுயநலம் இல்லாமல் எங்களோடு வரும் கட்சிகளோடு இணைந்து 234 தொகுதிகளிலும் தனித்து மட்டுமல்ல, தனித்துவத்தோடு போட்டியிடவிருக்கிறோம்.
ஏனென்றால் விஜயகாந்த்தைப் போல் நாங்கள் முதல்வர் பதவிக்குக் கூட ஆசைப்படவில்லை.
விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக எங்கள் கட்சி தலைவர்கள் கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் தொண்டர்கள்? ஏற்க மாட்டார்கள்.
தனித்து நின்றால் வெற்றி பெற முடியாது என்பது பா.ம.க.விற்கு கூட தெரியாதா என்ன? இருந்தாலும், அவர்கள் 8 மாதத்திற்கு முன்பே அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து விட்டு, எங்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் கூட்டணிக்கு வரலாம் என்றார்கள். ஆனால் இதுவரை ஒருவர் கூட அவர்கள் கூட்டணிக்கு செல்லவில்லை.
2 திராவிட கட்சிகளுக்கு எதிரான வாக்குகள் சிதறி விடக்கூடாது என்பதற்காக தான் கூட்டணி அமைக்க முயற்சித்தோம். அதற்காக எங்களை பலவீனமானவர்கள் என்று எண்ணி விடக்கூடாது.
அதேபோல் விஜயகாந்த் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் தான் கூட்டணி என்று தே.மு.தி.க. தெளிவாக அறிவித்து இருக்கிறது. ஆனால் கருணாநிதி, ‘‘தே.மு.தி.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது'' என்று கூறுகிறார்.
அப்படியானால், நான் கேட்பது விஜயகாந்த் தலைமையை ஏற்று, அவர்களுடன் தி.மு.க. கூட்டணி வைக்க போகிறதா?
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications