பாஜக கூட்டணியில் 'நோ' பாமக.... 'முதல்வர் வேட்பாளருடன்' தேமுதிகவுக்கு 130 தொகுதிகள்?
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக ஏற்று அக்கட்சிக்கு 130 தொகுதிகளை ஒதுக்க பாரதிய ஜனதா கட்சி முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக, காங்கிரஸ், பாஜக, மக்கள் நலக் கூட்டணி என அனைத்து கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ள பேச்சுகளை நடத்தி வந்தது தேமுதிக. இந்நிலையில் திமுக அணியில் காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக இணைந்துவிட்டது.
இதனால் திமுக- காங்கிரஸ் எனும் வலுவான இந்த அணிக்கு விஜயகாந்த் தானாகவே வந்துவிடுவார் என நம்பிக்கையுடன் அந்த கட்சிகள் காத்து கொண்டிருக்கின்றன. பாஜகவோ எப்படியும் தேமுதிகவை வளைத்துவிட வேண்டும் என்பதில் மும்முரமாக இருக்கிறது.

திமுகவில் 50தான்...
இதற்காக தொடர்ச்சியாக அடுத்தடுத்து தலைவர்களை அனுப்பி வைக்கிறது பாஜக. திமுக அணியில், 78 தொகுதிகள், துணை முதல்வர் மற்றும் 10 அமைச்சர்கள் பதவி, உள்ளாட்சித் தேர்தலில் 50% இடம் என்பதுதான் தேமுதிகவின் நிபந்தனையாக இருந்தது. இதனை அடியோடு நிராகரித்துவிட்டது திமுக. அதிகபட்சமாக 54-60 தொகுதிகள்தான் தர முடியும் என்பது திமுகவின் நிலைப்பாடு.

இழுபறி
இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிருப்தியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால்தான் திமுக- தேமுதிக கூட்டணி உருவாவதில் இழுபறி நீடிப்பதாகவும் கூறப்படுகிறது.

130தரும் பாஜக
இந்நிலையில் பாஜகவோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதல்வர் வேட்பாளர்- அத்துடன் 130 தொகுதிகளை தருகிறோம் என்ற பேரத்துடன் பேச்சுவார்த்தைகளை மும்முரமாக நடத்தி வருகிறது.

நோ பாமக
இந்த பேச்சுவார்த்தைகளில் ஒரு நிபந்தனையாக 'பாமகவை சேர்க்க வேண்டாம்' என்றும் தேமுதிக தரப்பு கூறிவருகிறதாம். இதனால்தான் சென்னை வந்த தமிழக பாஜக பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பாமக தலைவர்கள் எவரையும் சந்திக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

100 தரும் மநகூ
ஏற்கனவே மக்கள் நலக் கூட்டணி, முதல்வர் வேட்பாளருடன் 100 தொகுதிகளைத் தர உள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் அதிக தொகுதிகள் தரும் பாஜகவின் நிபந்தனைகளை ஏற்பாரா விஜயகாந்த்? என்பது ஓரிருநாட்களில் தெரிந்துவிடும்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications