பாஜகவின் மெகா கூட்டணியில் விஜயகாந்த், வைகோ, ராமதாஸ், ரங்கசாமி, ஈஸ்வரன், பச்சமுத்து!!
சென்னை: இதோ அதோ என்று மெதுமெதுவாக பாரதிய ஜனதாவின் மெகா கூட்டணி உதயமாகிக் கொண்டிருக்கிறது. இதன் முதல் போணியாக வைகோ, பாஜகவுடன் கூட்டணி அமைப்போம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.
பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சிவசேனா, அகாலி தளம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவும் விரைவில் இந்த கூட்டணியில் இணைய இருக்கிறார்.
இந்த நிலையில் மறுமலர்ச்சி திமுகவும் பாரதிய ஜனதா தலைமையிலான அணியில் இணைவதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவித்திருக்கிறது.

க்ரீன் சிக்னல் பாமக
அத்துடன் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸும் பாஜக தலைவர் ராஜ்நாத்தை டெல்லியில் அண்மையில் சந்தித்து பேசினார். இதனையடுத்து பாமகவும் பாஜக அணியில் இணைவது உறுதியாகி இருக்கிறது. நாளை நடைபெறும் பாமக பொதுக் குழுவில் அனேகமாக இதுபற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பச்சமுத்து, ஈஸ்வரன்
ஏற்கெனவே பாரதிய ஜனதா அணியில் இணைந்துவிட்டதாக இந்திய ஜனநாயகக் கட்சியின் பச்சமுத்து அறிவித்திருக்கிறார். இந்த பட்டியலில் ஈஸ்வரன் தலைமையிலான கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியும் இணைய இருக்கிறது.

புதுவை ரங்கசாமி
இதேபோல் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸும் பாஜக அணியில் இணையக் கூடும் என்று தெரிகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாஜக ஆதரவில் நடைபெற்ற வல்லபாய் படேலின் பிறந்த நாள் விழாவில் என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர்கள் கலந்து கொண்ட போதே இது உறுதியாக தெரிய வந்தது.

விஜயகாந்த்
இந்த பட்டியலில் விஜயகாந்தின் தேமுதிகவை சேர்க்கும் முயற்சிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான முழு முயற்சிகளிலும் பாஜக இறங்கியுள்ளது. தேமுதிக தரப்பும் கூட திமுகவுடன் பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டே பாஜக அணியில் தொகுதி பங்கீடு வரை சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. விரைவில் தேமுதிகவும் இணைய 'மெகா கூட்டணி"யாக பாஜக லோக்சபா தேர்தலை சந்திக்க இருக்கிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications