ரஜினி வந்தா நல்லது... இல்ல கமல், விஜய், அஜீத் வந்தாலும் ஓகே! - பாஜகவின் கணக்கு இது
குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதில் பாஜவுக்கு இணை வேறு யாருமில்லை. அதற்கு சிறந்த உதாரணம் இன்றைய தமிழ்நாட்டு அரசியல்.
ஒரு பக்கம் 7 எம்எல்ஏக்களை மட்டும் வைத்துக் கொண்டு முதல்வராகத் தொடரும் ஓபிஎஸ்... இன்னொரு பக்கம் 127 எம்எல்ஏக்களை கூவத்தூரில் அடைகாத்து வைத்திருந்தும், முதல்வராக முடியாமல் தவிக்கும் சசிகலா. இந்த இருவரையும் அந்தரத்தில் தொங்க வைத்துக் கொண்டு, அரசியலில் அடுத்த கட்ட காய் நகர்த்தல்களைத் தொடர்கிறது பாஜக.

தமிழகத்தில் தங்கள் கட்சியின் முக்கிய மைனஸ், கவர்ச்சிகரமான தலைவர்கள் யாருமில்லை என்பதைப் புரிந்து வைத்துள்ள பாஜக, அதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளது.
எப்படியாவது ரஜினிகாந்தை இழுத்து பாஜகவின் தமிழ்நாட்டுத் தலைவராக்கிவிட வேண்டும் என்பது அவர்களின் கனவு. ஆனால் அவரோ இவர்கள் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்க மறுக்கிறார்.
சரி, ரஜினி வரும்போது வரட்டும்.... அவருக்கு அடுத்த நிலையில் உள்ள நடிகர்களை ஏன் விட்டு வைக்க வேண்டும். அவர்களுக்கும் அழைப்பு விட்டுப் பார்ப்போம் என்று முடிவு செய்து, கமல் ஹாஸன், சரத்குமார், விஜய், அஜீத் ஆகிய நால்வரிடமும் பேசி வருகிறார்களாம் பாஜக தலைவர்கள். இதனை வெளியிட்டிருப்பது பாஜக ஆதரவுப் பத்திரிகையொன்று!
இவர்களில் சரத்குமார் ஏற்கெனவே பாஜகவுக்கு இணக்கமாகப் பேசி வருபவர்தான். கடந்த தேர்தலில் பாஜகவுன் கூட்டணி வைக்க ஒப்புக் கொண்டு, கடைசி நேரத்தில் அதிமுக பக்கம் போனவர். மீண்டும் பாஜகவுடன் நெருக்கமாகியுள்ளார். கமல் ஹாஸன் அவ்வப்போது பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை போன்றவர்களுடன் தொடர்பில்தான் உள்ளார் என்கிறார்கள். அஜீத் மட்டும்தான் இன்னும் பிடிகொடுத்துப் பேசவில்லையாம்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications