சர்ச்சை பேச்சு: ஹெச்.ராஜாவிற்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்
தஞ்சாவூர்: சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் நல கூட்டணி கட்சியினர் கருப்புகொடி காட்டி ஒரத்தநாட்டில் போராட்டம் நடத்தினர்.
பாரதிய ஜனதா கட்சியின் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியின் ஊழியர் கூட்டம் ரத்னா மகாலில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ஒரத்தநாடு வந்தார்.

அப்போது, சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் ஹெச்.ராஜாவை ஒரத்தநாட்டிற்குள் அனுமதிக்க மாட்டோம் எனக் கூறி மக்கள் நல கூட்டணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், ஒரத்தநாட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஹெச்.ராஜா வரக்கூடாது என்பதை வலியுறுத்தி ஒரத்தநாடு பஸ் நிலையம் அருகே மக்கள் நல கூட்டணி கட்சியினர் 50க்கும் மேற்பட்டவர்கள் கருப்பு கொடிஏந்தி போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகணன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து போலீசார் பாதுகாப்பு அளித்ததை தொடர்ந்து ஹெச்.ராஜா கூட்டத்தில் கலந்து கொண்டார். மக்கள் நல கூட்டணி கட்சியினரின் இந்த திடீர் போராட்டத்தால் ஒரத்தநாடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications