சின்னப் பசங்க விளையாட்டுதான்.. ஆனாலும் வாழ்க்கையில் இந்த சுவாரஸ்யம் கூட இல்லாட்டி எப்படி!
சென்னை: இந்த பேஸ்புக் இருக்கு பாருங்க.. சில நேரம் நம்மை சின்னப் புள்ளையா மாத்தி விளையாடும். இருக்கிற டென்ஷன் எல்லாவற்றையும் தூக்கித் தூரப் போட்டு விட்டு குடுகுடுன்னு இதில் இறங்கி விளையாடும்போது கிடைக்கும் சந்தோஷமே அலாதிதான்.. இதுகூட இல்லாமல் என்ன சுவாரஸ்யம் இருக்குது வாழ்க்கையில்.
இப்படித்தான் இப்போதும் ஒரு விளையாட்டு பேஸ்புக்கில் ஓடிக் கொண்டிருக்கிறது. பலர் கலாய்க்கிறார்கள், பலர் கலாய்க்கப்படுகிறாகள். வயது வித்தியாசம் இல்லாமல் அத்தனை பேரும் ஆர்வம் காட்டி குதூகலிக்கின்றனர் இந்த விளையாட்டில்.
அதுதான் கருப்பு வெள்ளைப் பட விளையாட்டு. இதை Black and white challenge என்ற பெயரில் விளையாடி வருகின்றனர் நெட்டிசன்கள். ரொம்பெல்லாம் கஷ்டமான விளையாட்டு கிடையாது இது.

கருப்பு வெள்ளை சவால்
நம்மளோட கருப்பு வெள்ளைப் படத்தைப் போட வேண்டும். அதை யாராவது லைக் செய்தால் அவ்வளவுதான், அவர்களது கருப்பு வெள்ளைப் படத்தைப் போடுமாறு நாம் அழைக்க (அணத்த) வேண்டும். இப்படியாக இது ஒரு சங்கிலித் தொடர் போல ஓடும்.

சங்கிலி முருகன் போட்டோ!
இந்த விளையாட்டில் பல தமாஷ்களைப் பார்க்க முடிகிறது. பலர் தங்களது இளமைக்காலத்தில் எடுத்க பழைய சங்கிலி முருகன் டைப் படத்தையும், பழைய ஆர்.எஸ். மனோகர் டைப் படங்களையும் போட்டு திகிலூட்டுகின்றனர். இன்னும் பலர் இருக்கிற கலர் படத்தையே கருப்பு வெள்ளையாக்கி் போட்டு சமாளிக்கின்றனர்.

கலர் தெய்வங்கள்.. கற் சிலைகளாக!
மொத்தத்தில் இந்த விளையாட்டு ஹிட் ஆகியுள்ளது. இதன் மூலம் பல கலர் "தெய்வங்களை" கருப்பு வெள்ளை சிலையாகவும், "கருப்புத் தங்கங்களை" இன்னும் பயங்கர கருப்பாகவும் பார்க்க முடிகிறது. இப்படிக் கருப்புப் படங்களைப் போடுவோர் challenge accepted என்று போட்டு சம்பந்தப்பட்டவர்களை டேக் செய்ய வேண்டும்.

வலையில் சிக்கிய வலைஞர்கள்
ஆரம்பத்தில் பலர் தெரியாத்தனமாக வந்து லைக் போட்டு அடடா சூப்பரப்பு என்று கவுண்டமணி ரேஞ்சுக்குப் பாராட்டி வலையில் மாட்டினார்கள். ஆனால் இப்போது இந்த விளையாட்டு சூடு பிடிக்க அவர்களும் இதில் இப்போது வெறித்தனமாக இறங்கி பலரை வேட்டையாடி வருகின்றனர்.
நல்ல விளையாட்டுதான்... இது கூட இல்லாட்டி பிறகெப்படி வாழ்க்கையில் சுவாரஸ்யம் கூடும்... நீங்களும் விளையாடிப் பாருங்க மக்களே!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications