சென்னையை "மிரட்டிய" செந்நிலவு.. பேரழிவெல்லாம் வராதாம், பயப்பட வேண்டாமாம்
சென்னை: சென்னையில் "பிளட் மூன்" எனப்படும் செந்நிற நிலவு தெரிந்ததால் பேரழிவு ஏதேனும் ஏற்படுமோ என்று மக்கள் மத்தியில் சிலர் வதந்தியைக் கிளப்பி விட்டுள்ளனர். ஆனால் அதெல்லாம் எதுவும் இல்லை என்று ஆய்வாளார்கள் தெரிவித்துள்ளனர்.
"பிளட் மூன்" என்பது பொதுவாக பேரழிவிற்கு எச்சரிக்கையளிக்கும் கடவுளின் குறியீடாக பல்வேறு சமூகத்தைச் சார்ந்த மக்களால் கருதப்படுகிறது.
இது முழுச் சிவப்பாக பார்க்கவே திகிலூட்டும் வகையில் இருப்பதனால் அவ்வாறு நம்பப்படுகிறது. இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக இச்சிவப்பு நிலா சென்னையில் நேற்று தோன்றியது.

சந்திர கிரகண நேரம்:
3 கிரகங்களும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது பூமியின் நிழல் சந்திரன் மீது படும். பூமி கடந்து செல்லும் தூரம், சூரியன்-பூமி-நிலா ஆகிய கோள்கள் இடையிலான கோணம் போன்றவற்றின் அடிப்படையிலேயே சந்திர கிரகணம் நேரம் அமையும்.

ரத்தச் சிவப்பு நிறம்:
சந்திரன் சூரியனிடமிருந்தே ஒளியைப் பெறுகிறது என்றாலும், கிரகணம் நிகழும்போது பூமியின் நிழலில் நிலா இருக்கும்போதும், அதன் மேற்பரப்பை சில ஒளிக்கதிர்கள் தாக்குவதால் அது ரத்த சிவப்பாக தோன்றுகிறது. இந்த காரணத்தினாலேதான் சூரியன் மறையும்போது வானமும் அவ்வப்போது, ஆரஞ்சு, சிவப்பு மற்றும் பஞ்சு மிட்டாய் நிறங்களில் காட்சியளிக்கிறது.

வருடத்திற்கு 4 முறை:
சந்திர கிரகணம் பொதுவாக முழு சந்திரகிரகணம், பகுதி சந்திரகிரகணம் என 2 வகைப்படும். பகுதி சந்திரகிரகணம் வருடத்திற்கு 3 தடவையும், முழு சந்திரகிரகணம் வருடத்திற்கு ஒரு முறையும் தெரியும்.

அழகாய் ஜொலித்த நிலவு:
நேற்று மாலை கடற்கரைகளில் இருந்து இந்த முழு சிவப்பு நிலாவை பலர் கண்டுகளித்தனர். மாலை சுமார் 6.30 மணிக்கு முழு பெளர்ணமியில் நிலா சிவப்பாக தோன்றியது. சிறிது நேரம் மேகத்துக்குள் மறைந்திருந்தாலும், நிலாவை சுற்றிலும் சிவப்பு நிறமாக அழகாகவே தோன்றியது.

மீண்டும் பால் நிறம்:
இதனைத்தொடர்ந்து இரவு 7.15-7.30 வாக்கில் நிலா முழுவதும் மஞ்சள் நிறத்தில் காட்சியளித்தது. தொடர்ந்து, மஞ்சள் நிறம் சிறிது சிறிதாக மாறத்தொடங்கியது. பின்னர் சந்திரன் எப்போதும் போல வெண்மை நிறத்தில் மாறியது.

கண்டுகளித்த மக்கள்:
சென்னை கடற்கரைகளிலும், கோளரங்கத்திலும் ஏராளமான பொதுமக்கள் சந்திரகிரகணத்தை கண்டுகளித்தனர். இதே போல தமிழகத்தின் பல பகுதிகளிலும் இந்தச் சந்திரகிரகணம் தெரிந்தது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
27 ஆண்டுகளுக்கு பிறகு.. இன்று ப்ளூ மைக்ரோ மூன்! மிஸ் பண்ணாதீங்க மக்களே! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications