Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொடூர ப்ளூவேல், சக்திமான்.. இதுவரை இந்தியாவில் உயிர் குடித்த விளையாட்டுகள்

இந்தியாவின் இப்போதைய அதிர்ச்சி ப்ளூவேல் விளையாட்டுக்கு பலியாகும் சிறுவர்கள், இளைஞர்கள் என்பதுதான். இதே போல இந்தியாவின் குழந்தைகள் மற்றும், சிறுவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் என்று எல்லோரிடமும் பாதிப்ப

Subscribe to Oneindia Tamil

சென்னை: ப்ளூவேல் விளையாட்டு போல இந்தியாவில் குழந்தைகள் மற்றும், சிறுவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் என்று எல்லோரிடமும் பாதிப்பை உண்டாக்கி உயிர்பறித்த விளையாட்டுக்கள் நிறைய உள்ளன.

விபரீத விளையாட்டுக்கள் எப்படி வினையாகின்றன என்பதை பெற்றோருக்கும் இளைய தலைமுறையினருக்கும் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.

அதே போல சினிமாவில் ஹீரோக்கள் செய்யும் சாகசங்களைப்போல ரியலாகவும் செய்ய நினைத்து பல பேர் தங்களின் உயிரை இழந்த சம்பவங்கள் இந்தியாவில் நடந்துள்ளன. கடந்த ஜூலை மாதம் 24ஆம் தேதி மும்பை தொழிலதிபர் அப்படித்தான் உயிரிழந்துள்ளார்.

பாகுபலி போல சாகசம்

பாகுபலி போல சாகசம்

இந்திரபால் படேல் என்ற அந்த மும்பைத் தொழிலதிபர் மும்பையை அடுத்து 73 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் சஹாபூர் போர்ட்டில் இருக்கும் நீர்வீழ்ச்சி ஒன்றில் 'பாகுபலி' திரைப்படத்தில் காட்டப்படும் பிரபாஸ் போல அருவியைத் தாண்டிக் குதித்து அநியாயமாக உயிரிழந்திருக்கிறார்.

சக்திமான்

சக்திமான்

சில பத்து ஆண்டுகளுக்கும் முன்பாக, இப்படித்தான் ‘சக்திமான்' என்றொரு குழந்தைகளுக்கான தொடர் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. முகேஷ் கன்னா சக்திமானாக அதில் ஒரு விரலை உயர்த்திப் பிடித்துக் கொண்டு மந்திரம் உச்சரித்து தனக்குத் தானே சுழலும் பூமி போலச் சுற்றுவார்

உயிரழந்த சம்பவங்கள் அதிகம்

உயிரழந்த சம்பவங்கள் அதிகம்

உடனே அவருக்குப் பறக்கும் சக்தி வந்து நினைத்த மாத்திரத்தில், நினைத்த இடத்திற்குச் சென்று விடுவார். இது அந்த தொடரில் வந்த காட்சி. இதைப் பார்த்து நிஜமென்று நம்பிய சிறுவர்களில் பலர் மொட்டை மாடியில் நின்று கொண்டு இதைப் பரீட்சித்துப் பார்த்து உயிரிழந்த சம்பவங்கள் நிறைய நடந்துள்ளன.

Recommended Video

    ப்ளூ வேல் கேமினை கூகுளில் அதிகம் தேடிய நகரங்களின் பட்டியல்- வீடியோ
    3000 பேர் பலி

    3000 பேர் பலி

    இன்றைக்கு உலக அளவில் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ப்ளு வேல் விளையாட்டிற்கு இதுவரை 3000 பேர் பலியாகியுள்ளனராம். தமிழகத்தில் முதல்பலி மதுரையில் நிகழ்ந்துள்ளது.

    தேவை தனிமனித கட்டுப்பாடு

    தேவை தனிமனித கட்டுப்பாடு

    மொத்தத்தில் எத்தனை எச்சரிக்கை செய்யப்பட்டாலும் தனிமனித கட்டுப்பாடு என்ற ஒரு விஷயமும் உண்டு. மனிதர்கள் தங்களால் எதைச் செய்ய முடியும்? எது விபரீதத்தில் கொண்டு விடும்? என்பதை பகுத்துணரக் கூடியவர்களாக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் இப்படிப்பட்ட விபரீதங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.

    இணையதள கண்காணிப்பும் அவசியம்

    இணையதள கண்காணிப்பும் அவசியம்

    தனிமனிதர்கள் கைகளில் மொபைல் போன்கள் புழங்கும் சூழலில் அவர்களைக் கண்காணிக்கும் அல்லது அவர்கள் பயன்படுத்தும் இணயதளங்களை கண்காணிக்கும் நடவடிக்கை அவசியம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். அப்போதுதான் இது போன்ற கொடூர விளையாட்டுக்கள் தொடராது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+