தமிழகத்தை சேர்ந்த 2 பேர் உட்பட 7 பேருடன் அந்தமான் அருகே மாயமான படகு

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடியைச் சேர்ந்த கயத்தான், ராமநாதபுரத்தைச் சேர்ந்த செந்தில்குமார், வடமாநில தொழிலாளர்கள் ஐந்து பேர் என மொத்தம் 7 பேர், அந்தமானில் உள்ள ஒரு தனியார் கப்பல் நிறுவனத்தில் வேலையில் இருந்தனர். போர்ட்பிளேரில் இருந்து நிகோபர் தீவுகளுக்கு, தோணி போன்ற ஒரு படகு மூலம் கட்டுமானம் மற்றும் உணவு பொருட்களை ஏற்றிச் செல்லும் பணியில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Boat missing near Andaman

கடந்த 15ம் தேதி பொருட்களை படகில் ஏற்றிக் கொண்டு போர்ட்பிளேரில் இருந்து புறப்பட்டனர். 20 மணி நேரத்தில் அவர்கள் நிகோபார் தீவுகளை சென்றடைந்திருக்க வேண்டும். ஆனால், படகு செல்லவில்லை. இதையடுத்து, தங்கள் நிறுவனத்திற்கு சொந்தமான படகு ஊழியர்களுடன் கடலில் மாயமானதாக கப்பல் நிறுவனம் அந்தமான் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளது.

இந்நிலையில், காணாமல் போன தங்கள் உறவினர்களை கண்டுபிடித்து தர வேண்டும் என 7 பேரின் உறவினர்கள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதன் அடிப்படையில் கடலோர காவல்படை மற்றும் மீன்வளத்துறை ஆகியவற்றிற்கு தகவல் கொடுக்கப்பட்டு, காணாமல் போன ஊழியர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+